சச்சின் விலகியதாக பரவிய செய்தி.. வித்தியாசமாக பதிலளித்த மும்பை இந்தியன்ஸ்.. உண்மை என்ன?

0
632
Sachin

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து, அடுத்த மூன்று நாட்களில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது.

ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியிலிருந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மீண்டு வர முடியாத காரணத்தினால், இந்திய அணி விளையாடிய அந்த டி20 தொடருக்கு பெரிய வரவேற்பு இல்லை.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் களம் மிகவும் விரக்தியான மனநிலையில் இருந்தது. ரசிகர்களுக்கு இந்திய வீரர்கள் வெளிப்படுத்தும் திறமை எதுவும் பரவசத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் மனம் கிரிக்கெட்டில் ஒட்டாமல் இருந்தது.

இந்த நிலையில்தான் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மீண்டும் தம்முடைய அணிக்கு கொண்டு வந்தது மும்பை இந்தியன்ஸ். அந்த ஒரே நிகழ்வில் இந்திய கிரிக்கெட் களம் மீண்டும் சூடு பிடித்தது.

இந்தச் சூடு குறைவதற்கு முன்பாகவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த 10 ஆண்டுகளில் கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மாவை, அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். மேலும் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாகவும் அறிவித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் களம் சூட்டைத் தாண்டி கொதிநிலையை எட்டியது.

- Advertisement -

இந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கம் குறைவதற்கு முன்பாகவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்டர் பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நீக்கியது என்பதான செய்திகள் வேகமாக பரவியது. இது சில இடங்களில் அதிகாரப்பூர்வமாகவும் செய்தியாக வந்தது.

இந்த நிலையில் இதை மறுக்கும் விதமாகவும், அதே சமயத்தில் நேரடியாக பதில் அளிக்காமலும், சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர்ந்து இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு, சச்சின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் நிறைவடைவதற்கான வாழ்த்தை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இதிலிருந்து சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகவில்லை என்பது தெரிய வருகிறது. நேற்று பரவிய அந்த செய்தி வதந்தி என்பதும், அதற்கு தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் முற்றுப்புள்ளி வைத்திருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது!