ஆஸி வீரர் காயம்.. உடனே அதிவேக இங்கிலாந்து வீரரை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்.. உடனடி நடவடிக்கை

0
409
MI

இந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், தொடர் துவங்குவதற்கு முன்பாகவே வீரர்களின் காயம் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கான்வே காயம் அடைந்து இருக்க, பதிரனாவும் காயம் அடைந்து முதல் 5 போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அவருடைய இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடக்கூடிய மாற்று வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மானும் இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் காயமடைந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இதே பங்களாதேஷ் தொடரில் இடம்பெற்று விளையாடிய இலங்கை அணியின் இளம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா காயமடைந்து வெளியேறி இருந்தார். இவரை 5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த மினி ஏலத்தில் இலங்கையை சேர்ந்த தில்சன் மதுசங்கா, நுவன் துஷாரா, ஜெரால்ட் கோட்சி என அருமையான மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கி இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. மேலும் அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஜேசன் பெஹரேன்ட்டாப், ஆகாஷ் மத்வால், அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என வலிமையான வேகப் பந்துவீச்சு கூட்டணி அமைந்திருந்தது.

இப்படியான நிலையில் தான் தில்சன் மதுசங்கா காயமடைந்து முதல் சில பல போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என தெரிய வந்திருக்கிறது. இவர் இடது கை வேகம் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதே போல மும்பை அணியின் இடதுகை வேதப்பந்து வீச்சாளர் ஆன ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹரேன்டாப்பும் காயமடைந்திருக்கிறார்.

- Advertisement -

புதிய வீரரை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ்

மேலும் அவர் காயம் அடைந்தது மட்டும் இல்லாமல் தொடரை விட்டும் வெளியேறி இருக்கிறார். இதனால் இடதுகை வேகப்பந்து வீச்சுக்கான ஆப்ஷன்கள் இரண்டு பேரையுமே மும்பை இந்தியன்ஸ் அணி இணைந்திருந்தது. எனவே இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பின்னடைவாக இருந்த சூழ்நிலையில், புதிய வீரரை தேடி வந்தது.

இதையும் படிங்க : இலங்கை பங்களாதேஷ் அணிகள்.. எல்லை மீறும் வம்பு.. ஹெல்மெட் செலிப்ரேஷன்.. நடந்தது என்ன?

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் அதிவேக இடதுகை பந்துவீச்சாளர் லூக் வுட்டை அவரது அடிப்படை விலையான ₹50 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இவர் இங்கிலாந்து அணிக்கு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியதோடு, மொத்தமாக 140 டி20 போட்டிகளில் விளையாடி 147 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இடதுகை பந்துவீச்சாளரான இவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது!