அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கேகேஆர் அணிக்கு சென்று கேப்டன் பொறுப்பை ஏற்பாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் கேப்டன் பொறுப்புடன் கே கே ஆர் அணிக்கு சென்று விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தது.
அபிஷேக் நாயர் காரணம்
மும்பை இந்தியன்ஸ் அணி யில் ரோகித் சர்மா மற்றும் அபிஷேக் நாயர் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள். மேலும் இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதும், தற்போது ரோகித் சர்மாவுக்கு அபிஷேக் நாயர் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அபிஷேக் நாயர் கேகேஆர் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவர் மூலமாக ரோஹித் சர்மா தற்போது கேப்டன் இல்லாமல் இருந்து வரும் கேகேஆர் அணிக்கு சென்று கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டு வந்தது.
மும்பை இந்தியன்ஸ் பதிலடி
இன்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மா புகைப்படத்தை வெளியிட்டு அதில் கே கே ஆர் அணியின் முதலாளி சாருக் கான் நடித்து வெளியான டான் திரைப்படத்தின் வசனம் ஒன்றை எழுதி, இதன் மூலமாக அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இருப்பார் என்று தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: 148 வருடம்.. இந்தியா தெஆ 2வது டெஸ்ட் போட்டியில்.. முதல் முறை நடக்க போகும் வினோதம்
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் “நாளை சூரியன் உதிக்கப் போவது உறுதி. ஆனால் அது அவர்களுக்கு எதிராக இரவில்” என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் (k)night என்று குறிப்பிட்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடுவதுதான் உறுதியானது என்று தெரிவித்திருக்கிறது.






