148 வருடம்.. இந்தியா தெஆ 2வது டெஸ்ட் போட்டியில்.. முதல் முறை நடக்க போகும் வினோதம்

0
127
ICT

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அசாம் மாநில கவுஹாத்தியில் நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற இருக்கிறது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் தென் ஆப்ரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியா வந்திருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் நேர முறை

இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடைவேளை மதிய உணவு இடைவேளை ஆகவும் இரண்டாவது இடைவேளை தேநீர் இடைவேளை ஆகவும் விடப்படும். ஒரு நாளில் மூன்று பகுதி ஆட்டங்களும் தலா இரண்டு மணி நேரங்கள் நடக்கும்.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையில் நடைபெற்று பிறகு மதிய உணவு இடைவேளை விடப்படும். பிறகு 40 நிமிடங்கள் கழித்து 12:10 முதல் 2:10 வரையில் இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்று தேநீர் இடைவேளை விடப்படும். இதற்கு அடுத்து 20 நிமிடங்கள் கழித்து 2:30 முதல் 4:30 வரையில் கடைசி பகுதி நடைபெறும். தேவைப்பட்டால் அரை மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும்.

- Advertisement -

வரலாற்றில் முதல் முறை

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி வடகிழக்கில் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நவம்பர் 22 முதல் நவம்பர் 26 வரையில் நடைபெற இருக்கிறது. இங்கு சூரியன் தோன்றுவதும் மறைவதும் சீக்கிரத்தில் நடைபெற்ற முடிகிறது. இதன் காரணமாக 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தேநீர் இடைவேளை முன்பாகவும் உணவு இடைவேளை பின்பாகவும் விடப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : 2024 உலக கோப்பை ஜெயிக்க ரோஹித் தான் காரணம்.. அந்த பிளான அவர்தான் செஞ்சார் – ராகுல் டிராவிட் பேச்சு

இந்த போட்டி காலை 9 மணிக்கு துவங்கி 11 மணி வரையில் நடைபெறும். பிறகு 20 நிமிடங்கள் தேநீர் இடைவேளை கொடுக்கப்படும். பிறகு 11:20 முதல் 1:20 வரையில் இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து அடுத்து 40 நிமிடம் உணவு இடைவேளை கொடுக்கப்படும். அடுத்து இரண்டு மணி முதல் 4 மணி வரையில் மூன்றாவது பகுதி ஆட்டம் நடைபெற்று, இன்றைய நாளின் போட்டி முடிவடையும்.

- Advertisement -