ஐபிஎல் 2025

பஞ்சாப் வீரர்களுக்கு இந்த விஷயமே தெரியாது.. அதனால நீங்க இதைதான் செய்யணும்.. பாண்டியா சொன்னதாக அஸ்வானி குமார்

நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான அஸ்வானி குமார் தனது அறிமுக போட்டியிலேயே நான்கு விக்கெடுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பந்து வீசுவதற்கு முன்பாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

ஆட்டநாயகனான மும்பை இளம் வீரர்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது திறமைகளை உலகறியச் செய்யும் அணிகளில் முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் இந்த ஆண்டும் அதனை சரியாக செய்து வருகிறது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளுக்குள் சத்யநாராயண ராஜு, விக்னேஷ் புத்தூர் மற்றும் அஸ்வானி குமார் என மூன்று புதிய முகங்களை சர்வதேச உலகிற்கு காட்டி இருக்கிறது. அதில் முதல் போட்டியில் கவனம் ஈர்த்த விக்னேஷ் புதூருக்கு அடுத்தபடியாக கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரிய கவனத்தை ஈர்த்திருக்கும் 23 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறார்.

பஞ்சாப் முகாலியைச் சேர்ந்த இவர், கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் மூலமாக தனது அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த சூழ்நிலையில் தான் பந்து வீசுவதற்கு முன்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நீ ஒரு பஞ்சாபி வீரன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இது மிகவும் நல்ல உணர்வு, நான் இவ்வளவு சிறப்பாக செயல்படுவேன் என்று நினைக்கவில்லை. ஹர்திக் பாய் என்னிடம், ‘நீ பஞ்சாபை சேர்ந்தவன் பஞ்சாபி வீரர்கள் பயமற்றவர்கள். எனவே நம் எதிரிகளை பயமுறுத்தி உங்கள் போட்டியை மகிழ்ச்சியோடு விளையாடுங்கள்’ என்று என்னிடம் கூறினார். மேலும் மனிஷ் பாண்டே என்னுடைய பந்தில் பௌண்டரி அடித்திருந்தார். ஹர்திக் பாய் உடனே அவரது உடம்பை நோக்கி வீசச் சொன்னார்.

இதையும் படிங்க:ஹர்திக் கதையை கேட்டதும்.. உடனே அனிகேத் வர்மா காலில் விழுந்தார் – அவரது மாமா வெளியிட்ட தகவல்

அப்போது மனிஷ் பாண்டே ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த போட்டியில் எனக்குப் பிடித்த விக்கெட் என்றால் அது ஆன்ட்ரே ரசல் விக்கெட்தான். ஏனென்றால் அவர் ஒரு பெரிய வீரராக இருந்தார். ஹர்திக் பாய் என்னிடம் பயப்பட வேண்டாம், உன்னுடைய திட்டத்தோடு பந்துவீசு என்றார். எனவே அவரை வீழ்த்தியதிலும் எனக்கு மகிழ்ச்சி” என்று அஸ்வனி குமார் பேசியிருக்கிறார். கடந்த போட்டியில் மூன்று ஓவர்கள் வரை வீசிய அஸ்வினி குமார் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -
Published by