ஹர்திக் கதையை கேட்டதும்.. உடனே அனிகேத் வர்மா காலில் விழுந்தார் – அவரது மாமா வெளியிட்ட தகவல்

0
131
Hardik

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இளம் வீரர் அனிகேத் வர்மா பலரது கவனத்தையும் கவர்ந்தவராக இருக்கிறார். இந்த நிலையில் அவர் எப்படி சிறப்பான வீரராக உருவெடுத்தார் என்பது குறித்து அவருடைய மாமா அமித் பேசியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் அனிகேத் வருமா லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய நட்சத்திர வீரர்கள் ஆட்டம் இழந்த போதிலும் 41 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். இவர் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்கும் விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

நீதா அம்பானி சொன்ன தகவல்

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா சகோதரர்களிடம் நீதா அம்பானி பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதற்கு முன்னால் அவர்களிடம் பெரிய பொருளாதாரம் இல்லாத காரணத்தினால், அவர்கள் மேகியை தங்களது உணவாக சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறியதாக தெரிவித்தார்.

இந்த கதைதான் அனிகேத் வர்மாவை கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் வெறியோடு உழைக்க வைத்திருக்கிறது. இந்த கதை அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது? என்பது குறித்து, அவருடைய மாமா அமித் சில ஆச்சரியமான கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய காலில் விழுந்தார்

இதுகுறித்து அமித் கூறும்பொழுது ” நான் நீதா அம்பானி பாண்டியா சகோதரர்கள் குறித்து கூறியதை செய்தித்தாளில் படித்தேன். இதை பயிற்சிக்கு செல்லும் வழியில் அனிகேத் வர்மாவிடம் கூறினேன். அப்பொழுது மிகவும் இளைஞராக இருந்த அவர் வண்டியில் இருந்து இறங்கியதும் என்னுடைய காலில் விழுந்து வணங்கி ‘ நான் சிறிய விஷயங்களுக்கெல்லாம் புகார் செய்து கொண்டிருக்கிறேன். இனி அப்படி செய்ய மாட்டேன்’ என்று கூறினார். நான் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சிரித்தேன். ஆனால் அவர் என்னிடம் மிகவும் சீரியஸ் ஆகவே சொன்னார்”

இதையும் படிங்க : நான் 2 மாற்றத்தை செஞ்சு சிஎஸ்கேவ ஜெயிக்க வைப்பேன்.. அஸ்வினுக்கு இத பண்ணுவேன் – ஸ்ரீகாந்த் பேச்சு

“என்னுடைய முதல் வேலை ஆட்டோ ஷோரூமில் அமைந்தது. அங்கு எனக்கு முதல் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். நான் அதில் 1200 ரூபாய்க்கு அவருக்கு முதல் ஷூவை வாங்கி கொடுத்தேன். என் வாழ்க்கையில் நான் அவ்வளவு பெரிய பணத்திற்கு ஷூ வாங்கியது கிடையாது. நான் அவருக்காக எல்லாமே செய்திருக்கிறேன். அவர் அன்றைய நாள் அந்த புது ஷூவை வைத்துக் கொண்டுதான் தூங்கினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -