ஐபிஎல் 2023 : ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு மாற்று வீரராக தமிழக வீரரை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!

0
232

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் துவங்க இருக்கின்றன. இன்றிலிருந்து 59 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் பத்து அணிகள் கலந்து கொண்டு மோத இருக்கின்றன. இதன் துவக்கமாக இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்த உள்ளன.

இந்த வருட ஐபிஎல் தொடர்களின் ஆரம்பத்தில் இருந்தே நிறைய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் முக்கியமானவர்கள் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் மற்றும் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் காயம் நீண்ட காலமாக தொடர்கிறது. ஜஸ்பிரீத் பும்ரா   தன்னுடைய முதுகு வலி பிரச்சனைக்காக நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நியூசிலாந்து நாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை சென்று திரும்பி உள்ளார். அவருக்கு இரண்டு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.

- Advertisement -

ஜஸ்பிரீத் பும்ரா கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் பந்துவீச்சில் ஒரு தூணாக இருக்கிறார். இத்தனை வருடங்களுக்கு பிறகு தற்போது தான் மும்பை அணிக்கு ஜஸ்பிரிக் பும்ரா விளையாடாமல் இருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுவே முதல் முறை. கடந்த மூன்று சீசன்களிலும் மும்பை அணிக்காக அதிக விக்கெட் களை ஐபிஎல் தொடர்களில் உயர்த்தி இருப்பவர் அவர் தான். தற்போது நியூசிலாந்து நாட்டில் அறுவை சிகிச்சை செய்து விட்டு ஓய்வில் இருப்பதால் ஐபிஎல் தொடர்கள் மற்றும் அதனை ஒட்டி நடைபெறும் ஐ சி சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பும்ராவிற்கு மாற்றமான ஒரு வீரரை மும்பை அணி அறிவித்து இருக்கிறது அவர் தமிழகத்தைச் சார்ந்த பந்துவீச்சாளர். ரஞ்சிப் போட்டிகளில் கேரளாவிற்காக அறிமுகமான இவர் தற்போது தமிழக ரஞ்சி அணியில் ஆடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டிகளில் அறிமுகமான இவர் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியிலும் ஆடி இருக்கிறார். 66 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கும் சந்திப் வாரியார் 217 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறப்பான பந்துவீச்சு 44 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியதாகும் .

இதுவரை ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடி இருக்கும் இவர் இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட உள்ளார். பும்ராவிற்கு பதிலாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நல்ல அனுபவம் உள்ள வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்திருக்கிறது.

- Advertisement -