நாங்க ஜெயிச்சிருப்போம்.. ஆனா ஸ்டெம்புக்கு பின்னாடி இருந்தது தோனி.. அதான் தோத்தோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
14186
Hardik

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரனா மிகச் சிறப்பாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். தோல்விக்கு பின்னால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோனி குறித்து மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் டாஸ் வென்று சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய வைத்தது. அந்த அணிக்கு கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள், சிவம் துபே 38 பந்தில் 66 ரன்கள், கடைசியில் நான்கு பந்துகள் இருக்கும்போது வந்த தோனி 20 ரன்கள் என அதிரடியாக எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷான் 70 ரன் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். இதற்கு அடுத்து ரோகித் சர்மா திலக் வர்மா இருவரும் சேர்ந்து 60 ரன் பாட்னர்ஷிப் தந்தார்கள். ஒரு முனையில் நிலைத்து நின்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்தார்.

ஆனாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. காரணம் சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பதிரனா மும்பை இந்தியன்ஸ் அணியின் இசான் கிஷான், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரோமாரியோ செப்பர்ட் என முக்கிய விக்கெட்டுகளை சரியான நேரத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு திருப்புமுனையை தந்தார்.

தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “இது நாங்கள் எட்டக்கூடிய இலக்குதான். அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். இந்த போட்டியில் பதிரனாதான் வித்தியாசமாக இருந்தார். மேலும் அவர்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தார்கள், ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து தோனி சிறந்த யோசனைகளை வழங்கினார். இது அவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்தது. இந்த ஆடுகளம் கொஞ்சம் பந்து நின்று வந்தது. இது நன்றாக பேட்டிங் செய்வது மற்றும் இன்டெண்ட் காட்டுவது சம்பந்தப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி பாய் என்கிட்ட வந்து இதை சொன்னார்.. அங்க இருந்து எல்லாமே மாறிடுச்சு – மதிஷா பதிரனா பேட்டி

நாங்கள் பதிரனா முதல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றும் வரை ஆட்டத்தின் மிகவும் முன்னணியில் இருந்தோம். நாங்கள் அந்த இடத்திலிருந்து யோசித்து சிறப்பான வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும். சிவம் துபேவுக்கு சுழல் பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்துவீச்சாளர்கள் கடினமாக இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். அடுத்த நான்கு போட்டிகளுக்கு நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்