ஐபிஎல் 2025

ஸ்ரேயாஸ் கிட்ட எதையுமே பண்ண முடியல.. இந்த 2 விஷயம் மாறி இருந்தா கதை வேறயா இருக்கும் – ஹர்திக் பாண்டியா பேச்சு

நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பேட்டிங்கில் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்களை வீழ்த்தி விட்டதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.

- Advertisement -

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழையின் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே காணப்பட்டது.

20 ரன் குறைவு

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் 26 பந்தில் 44 ரன்கள், திலக் வர்மா 29 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் மும்பை அணி 220 ரன்கள் தாண்டி எடுக்கக்கூடிய இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு நெகேல் வதேரா 29 பந்தில் 48 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அற்புதமாக விளையாடி 41 பந்தில் 87 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயரை தடுக்க முடியவில்லை

இந்த தோல்வி குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்த விதத்தில் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார். அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். மொத்தமாக அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். இந்த இடத்தில் ஒரு பவுலிங் யூனிட்டாக எங்களுக்கு சிறந்த செயல் திறன் தேவைப்பட்டது. இது பெரிய ஆட்டங்களில் மிகவும் முக்கியமானது. அதே சமயத்தில் பஞ்சாப் அணி ஒட்டுமொத்தமாக அமைதியாக இருந்து எங்களை அழுத்தத்தில் தள்ளி விட்டார்கள்”

இதையும் படிங்க : 203 ரன்.. பிளே ஆப்பில் புது சரித்திரம்.. ஸ்ரேயாஸ் மரண மாஸ் பேட்டிங்.. மும்பை பெருமை காலி.. பைனலில் பஞ்சாப்

“நாங்கள் இந்த போட்டியில் ஏதாவது செய்திருக்கலாம் என்றால், எங்களுடைய பவுலர்கள் சரியான லென்த்தில் பேசியிருக்கலாம், இல்லை சரியான பாயிண்டில் இருந்து வீசி இருக்கலாம். இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பும்ராவை நான்கு ஓவர் மீதம் இருக்கும் பொழுதே கொண்டு வந்திருக்க முடியாது. அவரை மூன்று ஓவர் மீதம் இருக்கும் பொழுது கொண்டு வந்ததுதான் சரியானது. அவரால் எப்பொழுதும் ஏதாவது சிறப்பாக செய்ய முடியும். ஆனால் இன்று அவரால் முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by