203 ரன்.. பிளே ஆப்பில் புது சரித்திரம்.. ஸ்ரேயாஸ் மரண மாஸ் பேட்டிங்.. மும்பை பெருமை காலி.. பைனலில் பஞ்சாப்

0
2048
Shreyas

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றும் போட்டியில் மும்பை இந்தியன் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.

இந்த போட்டிக்கு முன்பாக மழை பெய்த காரணத்தினால் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் வழக்கம் போல் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே இருந்தது.

- Advertisement -

திலக் வர்மா சூரியகுமார் அதிரடி

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 7 பந்துகளில் 8 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 44 ரன்கள், திலக் வர்மா 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்கள்.

கடைசி கட்டத்தில் கேப்டன் பிரதிக் பாண்டியா 13 பந்தில் 15 ரன்கள், அதிரடியாக விளையாடிய நமன் திர் 37 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஓமர்சாய் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் சரவெடி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 9 பந்தில் 6 ரன், பிரியன்ஸ் ஆர்யா 10 பந்தில் 20 ரன், ஜோஸ் இங்லீஷ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து நெகேல் வதேரா ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து 47 பந்தில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 29 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாமல் ஒரு முனையில் நின்று கலக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 19ஆவது ஓவரின் முடிவில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இதில் அவர் மொத்தமாக 41 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் எடுத்தார். முடிவில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் மும்பையை எந்த ஒரு நிலையிலும் முன்னேற விடாமல் ஸ்ரேயாஸ் ஐயர் தடுத்தது ஆச்சரியப்படுத்தியது!

இதையும் படிங்க : விராட் கோலி விருப்பம் என்னனு எனக்கு தெரியும்.. ஆனா ஆர்சிபி இதில் பக்குவமா நடந்துக்கனும் – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 200 ரன்கள் மேற்பட்டு எடுத்து தோல்வி அடைந்ததில்லை என்ற பெருமையை இன்று இழந்து இருக்கிறது. மேலும் ப்ளே ஆப் சுற்றில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்னாக இது பதிவாகி புது வரலாறு உருவாகி இருக்கிறது.

- Advertisement -