15 ரன் 5 விக்கெட்.. போராடி வீழ்ந்த விதர்பா.. 42வது முறையாக மும்பை ரஞ்சி டிராபி சாம்பியன்

0
192
Ranji

இந்த ஆண்டு ரஞ்சி டிராபி சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்காக கடைசி கட்டத்தில் 69 பந்துகளில் அதிரடியாக சர்துல் தாக்கூர் 75 ரன்கள் எடுத்தார். விதர்பா அணியின் தரப்பில் ஹார்ஸ் துபே மற்றும் யாஸ் தாகூர் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய விதர்பா அணி பரிதாபமாக 105 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மும்பை தரப்பில் தனுஷ் கோட்டியன், சாம்ஸ் முலானி மற்றும் தவால் குல்கர்னி தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக 418 ரன்கள் குவித்தது. மும்பை அணிக்கு இளம் பேட்ஸ்மேன் முசிர் கான் 136 ரன்கள் எடுத்தார். விதர்பா அணியின் தரப்பில் ஹர்ஸ் துபே ஐந்து விக்கெட், யாஸ் தாக்கூர் மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

விதர்பா அணி 538 என்கின்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடியது. ஒரு கட்டத்தில் விதர்பா அணி ஐந்து விக்கெட் 353 ரன்கள் என்று இருந்தது. இவ்வளவு பெரிய இலக்கை விரட்டி ஆச்சரியப்படுத்துமா? என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். சதம் அடித்து கேப்டன் 109 ரன்களில் அக்சய் வட்கார் ஆட்டம் இழந்ததும், அங்கிருந்து விதர்பா அணி மேற்கொண்டு 15 ரன்கள் மட்டும் எடுத்து, 368 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. மும்பை அணியின் தரப்பில் சாம்ஸ் முலானி 4, முஷீர் கான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

முடிவில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த ஆண்டு ரஞ்சித் சீசனின் சாம்பியன் ஆனது. உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் அணியான மும்பை மாநில அணிக்கு, இது 42வது ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜேசன் ராய் பாகிஸ்தானில் இருப்பதை மறக்கக்கூடாது.. எங்களை மதிக்கனும் – வாசிம் அக்ரம் கோபம்

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 136 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட் கைப்பற்றிய முஷிர் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மும்பை அணியின் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் ஒட்டுமொத்தமாக 52 ரன்கள் மற்றும் 29 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி இந்த போட்டியின் வெற்றியுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.