தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி டிராபியில் கால் இறுதிப் போட்டியில் மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெதர் அணியை வீழ்த்தி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் சையத் முஸ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அனுபவ வீரர் ரகானே மற்றும் இளம் வீரர் சூரியனாஸ் ஷெட்கே அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் மும்பை அணி நுழைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த விதர்பா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அதர்வா டைடே 41 பந்தில் 66 ரன்கள், கருண் நாயர் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் வான்கடே 33 பந்தில் 51 ரன்கள், சுபம் துபே 19 பந்தில் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தார்கள்.விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. மும்பை பந்துவீச்சில் அண்கோலேகர் மற்றும் சூர்யனாஸ் ஷெட்கே இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவி ஷா 26 பந்தில் 49 ரன்கள், ரகானே 45 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் எடுத்து வலிமையான அடித்தளத்தை உருவாக்கினார்கள்.
இதற்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 5 ரன்கள், நட்சத்திர ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் 7 பந்தில் 9 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதன் காரணமாக மும்பை அணிக்கு நெருக்கடி உண்டானது.
இதையும் படிங்க : முதல் இடத்தை இழந்த ரூட்.. 1 புள்ளியில் ஜெய்ஸ்வால்.. ஹரி புரூக் அசத்தல் – ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்க்
இதைத்தொடர்ந்து இளம் வீரர் சூர்யனாஸ் ஷெட்கே 12 பந்தில் ஒரு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 36 ரன்கள், சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 22 பந்தில் 37 ரன்கள் எடுக்க மும்பை அணி 19.2 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.