ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்து வந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை இழந்திருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் பெரிய ஆதிக்கம் செலுத்தி 19 சதங்கள் அடித்திருக்கிறார். அவருக்கு பக்கத்தில் வேறு எந்த நட்சத்திர பேட்ஸ்மேன்களும் இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து அவர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியலில் முதல் இடத்தில் அதிகம் செலுத்தி வந்தார்.
ஹாரி புரூக் புதிய சாதனை
இந்த நிலையில் இங்கிலாந்தின் சக வீரரான ஹாரி புரூக் ஜோ ரூட்டை கீழே இறக்கி 898 புள்ளிகள் உடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஜோ ரூட் 897 புள்ளிகள் எடுத்து ஒரே ஒரு புள்ளியால் இரண்டாவது இடத்திற்கு இறங்கி இருக்கிறார்.
மேலும் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 818 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். கேன் வில்லியம்சனை விட ஒரே ஒரு புள்ளி குறைவாக எடுத்ததால் ஜெய்ஸ்வால் நான்காவது இடத்திற்கு இறங்கி இருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் மூன்று இடங்கள் சரிந்து 724 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் நிலை
மேலும் இந்திய அணியின் கில் 672 புள்ளிகள் உடன் 17வது இடத்திலும், விராட் கோலி 6 இடங்கள் சரிந்து 661 புள்ளிகள் உடன் 20வது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 595 புள்ளிகள் உடன் 31வது இடத்திலும், கே.எல்.ராகுல் 531 புள்ளிகள் உடன் 50வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 528 புள்ளிகள் உடன் 51வது இடத்திலும் இருக்கிறார்கள்.
இந்திய பேட்ஸ்மேன்களில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே குறிப்பிடும்படி முதல் 10 இடங்களில் இருந்து வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கில் சரியாக விளையாடாவிட்டால் இன்னும் அவர்கள் கீழே சரிவார்கள்.
இதையும் படிங்க :
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியல் :
ஹாரி புரூக் – 898
ஜோ ரூட் – 897
கேன் வில்லியம்சன் – 812
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 811
டிராவிஸ் ஹெட் – 781
கமிந்து மெண்டிஸ் – 759
டெம்பா பாவுமா – 753
டேரில் மிட்செல் – 729
ரிஷப் பன்ட் – 724
சவுத் ஷகீல் – 724