தமிழ்நாடு அணியின் 37 வருட கனவு.. கலைத்துப் போட்ட 3 சிஎஸ்கே வீரர்கள்.. ரஞ்சி அரை இறுதியில் தோல்வி

0
310
Ranji

இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக விளங்கும் உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபி ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.

தற்பொழுது ரஞ்சி டிராபியில் அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது. ஒரு போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதி வருகின்றன. மற்றொரு போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன.

- Advertisement -

டாஸ் வென்று பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்கள் எடுத்துச் சுருண்டது. விஜய் சங்கர் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணிக்காக விளையாடும் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சின் ஆரம்பத்தில் முக்கிய மூன்று தமிழக விக்கெட்டுகளை கைப்பற்றி சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதற்கடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் மும்பை அணிக்காக விளையாடும் மற்றும் ஒரு சிஎஸ்கே வீரர் சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் சதம் அடித்து, 109 ரன்கள் எடுத்தார்.

10வது இடத்தில் சர்துல் தாக்கூர் சதம் அடிக்க, 10வது இடத்தில் வந்த தனுஷ் கோட்டியன் 89 ரன்கள் எடுத்தார். 11வது இடத்தில் வந்த துஷார் தேஷ்பாண்டே 26 இடங்கள் எடுத்தார். கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே 224 ரன்கள் குவித்தார்கள். முடிவில் மும்பை அணி 378 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 232 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி மீண்டும் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தமிழக அணியின் தரப்பில் இந்திரஜித் 70 ரன்கள் எடுத்தார். மும்பையின் சாம்ஸ் முலானி 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் தமிழக அணியின் 37 வருட ரஞ்சி டிராபிக் கனவு முடிவுக்கு வந்தது. மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை அணியின் கேப்டன் ரகானேவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “அண்ணன் தம்பிங்கிறதுலாம் ரெண்டாவது.. சஞ்சு சாம்சனை பத்தி உங்களுக்கு தெரியாது” – அஸ்வின் பேட்டி

தமிழக அணி ரஞ்சி கிரிக்கெட்டில் 1987-88 சீசனில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு அடுத்து 2014-15ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்று கர்நாடக அணியிடம் தோல்வி அடைந்தது. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு குறிப்பிடும்படியான செயல்பாடுகள் இல்லை.