“அண்ணன் தம்பிங்கிறதுலாம் ரெண்டாவது.. சஞ்சு சாம்சனை பத்தி உங்களுக்கு தெரியாது” – அஸ்வின் பேட்டி

0
368
Ashwin

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் 17வது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டமாக 15 நாட்களுக்கு மட்டுமே அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு அருமையான அணியாக ஒருங்கிணைந்தது. சிறந்த பிளேயிங் லெவனை மனதில் வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு அளவாக கட்டமைக்கப்பட்ட சிறந்த அணியாக அது விளங்கியது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்திய ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகல் இருவரும் பௌலிங் யூனிட்டில் முதுகெலும்பாக இருக்கிறார்கள். மிக முக்கியமான பந்துவீச்சாளர்களான இருவரும் இந்தியர்கள் ஆக இருப்பதால், வெளிநாட்டு வீரர்களை வேறு விதத்தில் பயன்படுத்த நல்ல வசதி கிடைக்கிறது.

மேலும் இந்த இரண்டு வீரர்களையும் புதிய கேப்டனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்த சஞ்சு சாம்சன் திட்டமிட்டு வாங்கி இருப்பது பின் நாட்களில் தெரிய வந்தது. அணியை வலிமையாக கட்ட வேண்டும் என்று சஞ்சு சாம்சன் முடிவெடுத்து அஸ்வின் மற்றும் சாகல் இருவரையும் ஏலத்தில் வாங்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தனது ஐபிஎல் கேப்டன் குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” சஞ்சு சாம்சன் மைதானத்திற்கு வெளியே மிகவும் வேடிக்கையானவர். நிறைய பேர் இதை புரிந்து கொள்கிறார்களா? அல்லது அறிந்து வைத்திருக்கிறார்களா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேவும் வீரர்கள் எப்படி ஆனவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்வது கடினமானது.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இந்தி நன்றாக பேசுவான். மேலும் தமிழும் மலையாளமும் நன்றாக பேச வரும். மொழியின் காரணமாகவும், நாங்கள் இருவரும் சினிமா ஆர்வலர்கள் என்பதாலும் எங்களுக்குள் நெருக்கம் அதிகம். திரைப்படங்களில் இருந்து அதிக நகைச்சுவை நமக்கு வருவதால், நம் மாநிலத்தை விட்டு வெளியிலோ நாம் மொழி தெரியாதவர்களுடன் நாம் நகைச்சுவையாக இணைவது கடினம்.

ஆடுகளம் மற்றும் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதை பார்த்து நான் அவருக்கு ஏதாவது ஆலோசனைகள் சொல்வேன். களத்திற்கு மூத்த மற்றும் இளைய சகோதரன் முறையில்தான் இருப்போம். ஆனால் களத்திற்கு உள்ளே நாங்கள் அப்படி கிடையாது.

இதையும் படிங்க : “போறயா போய்க்கிட்டே இரு.. பும்ராவா இருந்தாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரிதான்” – கவாஸ்கர் பேச்சு

நான் சஞ்சு சாம்சன் விரும்புவதை செய்கிறேன். தேவைப்படும் பொழுது என்னுடைய ஆலோசனைகளை கூறுகிறேன். நான் கூறுவதில் அவர் விரும்புவதை எடுத்துக் கொள்கிறார். அவரை நல்ல ஒரு இளம் கேப்டனாக பார்க்கிறேன். அவரால் ஒன்றை வரையறுக்கவும் வித்தியாசப்படுத்தவும் முடியும்” என்று கூறியிருக்கிறார்.