டி20 உலகக்கோப்பையில் ஆரம்பித்து ஐபிஎல் கோப்பை வரை… கப் ஜெயிக்கவே பிறந்தவர் தோனி; பைனலில் இப்புடியொரு வேலையை செய்வார் – சேவாக் சொன்ன சீக்ரெட்!

0
1803

‘டி20 உலக கோப்பையில் துவங்கி ஐபிஎல் கோப்பை வரை, கோப்பைகளை வெல்வதற்கு பிறந்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் பைனலில் இப்படிப்பட்ட யுத்திகளை கையாள்வார்’ என்று பேசி உள்ளார் சேவாக்.

ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே அணியில் 14 சீசன்களில் விளையாடி 10முறை பைனலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றுள்ளார். நான்கு முறை கோப்பையை வெல்ல வைத்துள்ளார். ஐந்தாவது முறையாக இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

தோனி சிஎஸ்கே அணியில் மட்டுமல்லாது இந்திய அணியிலும் வெற்றிகரமான கேப்டனாக இருந்திருக்கிறார். டி20 உலககோப்பையை வென்றதில் துவங்கி 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன் பட்டம் என ஐசிசி நடத்தும் அனைத்தையும் இந்திய அணிக்காக பெற்றுத் தந்த ஒரே கேப்டனாக இருக்கிறார் தோனி.

கோப்பைகளை வெல்வதற்கு பிறந்தவர் தோனி, அவர் பைனலில் எப்படிப்பட்ட யுத்திகளை கையாளுவார் என்று தனது சமீபத்திய பேட்டியில் சேவாக் பேசியுள்ளார்.

“மகேந்திர சிங் தோனி ஆளுமை மிக்க வீரர். பல தந்திரங்களை கொண்டவர். கேப்டன் பொறுப்பில் ஒரு மந்திரவாதி. இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டும் என்றால், அவர் கோப்பைகளை வெல்வதற்காகவே பிறந்திருக்கிறார். டி20 உலககோப்பையில் ஆரம்பித்து ஐபிஎல் கோப்பை வரை தனது கிரிக்கெட்டின் கடைசி காலம் வரை வெற்றிகரமான ஆளுமையாக கேப்டனாக இருந்து வந்திருக்கிறார்.

- Advertisement -

அவர் பைனலில் வீரர்களை கையாளும் விதம் தான் வெற்றிகரமான கேப்டனாக வைத்திருக்கிறது. எந்தவித பதட்டமும் இல்லாமல் தெளிவான மனநிலையில் இருக்கும்படி வீரர்களை பார்த்துக்கொள்கிறார். ஃபீல்டிங்கில் சிறு தவறும் நேர்ந்துவிடாத அளவிற்கு கேப்டன் பொறுப்பில் இருந்து அதை சரி செய்து வருகிறார். மேலும் கீப்பிங்கில் நின்று கொண்டு அணியை மிகச் சிறப்பாக வழி நடத்துவதோடு, வீரர்களை சரியான இடத்தில் நிற்க வைக்கிறார். இந்த இடத்தில் தான் அவர் மற்ற கேப்டன்களை விட முன்னணியில் நிற்கிறார். இதுதான் அவரை வெற்றிகரமான கேப்டனாக மாற்றியுள்ளது.” என்றார் சேவாக்.