தோனிக்கு இது கடைசி ஐபிஎல் கிடையாது..! – இந்த 3 காரணங்கள் கேட்டால் நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்!

0
440

தோனிக்கு இது கடைசியா ஐபிஎல் கிடையாது என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை பின்வருமாறு காண்போம்

மாற்று விக்கெட் கீப்பர் இதுவரை கிடைக்கவில்லை..

- Advertisement -

தோனி இந்த வருட ஐபிஎல் சீசனில் கடைசி 10 பந்துகளில் களம் இறங்கி பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். விக்கெட் கீப்பிங்கில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். கீப்பிங்கில் நின்று சரியாக ஆள் நிறுத்தி, பீல்டிங்கில் தாக்கம் ஏற்படுத்தி வரும் தோனிக்கு சரியான மாற்று விக்கெட் கீப்பர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை.

டெவான் கான்வெ இருக்கிறார். அவருக்கு 31 வயது ஆகிறது. சில வருடங்களே அணியில் இருப்பார் என்பதால் நீண்ட காலத்திற்கான வீரராக அவர் தெரியவில்லை. அவர் சரியான மாற்று வீரர் என்று கருத இயலாது.

நிண்டகாலதிற்க்கான மாற்று கேப்டன் உருவாகவில்லை..

- Advertisement -

2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலம் கேப்டனாக இருந்துவரும் தோனிக்கு மாற்றாக வேறு கேப்டன் கிடைக்கவில்லை. கடந்த சீசனில் ஜடேஜாவை பயன்படுத்தினார்கள். அவர் சிஎஸ்கேவின் சூழலுக்கு ஏற்ற கேப்டனாக தெரியவில்லை. ஆகையால் நீண்ட காலத்திற்கான கேப்டன் இன்னும் யார் என்பதே தெரியாமல் நிலையில், தோனி உடனடியாக சிஎஸ்கேவை விட்டு வெளியேறிவிட மாட்டார். இன்னும் ஓராண்டு அணியில் இருந்து சரியான மாற்றுவீரரை தேர்ந்தெடுத்தபிறகு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்பாக்ட் வீரர் விதியால் இன்னும் ஓராண்டு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ள இம்பேக்ட் வீரர் விதியின் மூலம் தோனி தனது காலில் இருக்கும் பிரச்சினை காரணமாக அடுத்த சீசனில் பேட்டிங் இறங்கவில்லை என்றாலும், கேப்டன்ஷிப் மற்றும் கீப்பிங் இரண்டையும் விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு செய்யலாம். பேட்டிங்கில் 8ஆவது வீரராக இறங்குகிறார். இதற்கு மாற்று வீரரை கொண்டுவரலாம்.

கீப்பராகவும் கேப்டனாகவும் ஏற்படுத்தி வரும் தாக்கம் இன்றியமையாதது. அதற்கு இப்போது வரை மாற்று கிடைக்கவில்லை என்பதால் இன்னும் ஒரு ஆண்டு அவர் இருப்பார் என்று தெரிகிறது.