அடேங்கப்பா! தோனியின் மாமியாருக்கு இவ்வளவு சொத்து மதிப்பா? எப்படிங்க இது சாத்தியம்?

0
686

இந்திய கிரிக்கெட்டில் ஒப்பு இல்லாத தலைவன் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். தோனியை பிடிக்காதவர்கள் கூட அவர் இல்லாததால் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையையும் வாங்கவில்லை என்பதை ஒப்பு கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் படைத்த தோனி, தற்பொழுது கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விஷயங்கள் ஈடுபட்டு வருகிறார். எப்படி நம்ம தல அஜித் சினிமாவை தாண்டி ஏகே மோட்டோ ரைடு பைக் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

அதே போல், தோனி பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  விவசாயம் ,ராணுவம், பைக் என தோனிக்கு பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கி இருக்கிறார்.

இந்த நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது கால் எடுத்து வைத்திருக்கும் தோனி ஹரிஷ் கல்யான் வைத்து ஒரு படமும் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் தோனி இந்த நிறுவனத்தை 2020 ஆம் ஆண்டு தொடங்கி விட்டதாகவும் அதன் தலைமை செயல் அதிகாரி ஆக தோனியின் மனைவி ஷாக்சியின் அம்மாவான சீலா சிங்கை நியமித்தது தகவல் வெளியாகியுள்ளது.

தோனியின் மாமியார் ஆன சீலாசிங் எந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இல்லாதவர். இவ்வளவு பெரிய பொறுப்பை அவர்  மாமியாருக்கு கொடுத்து இருக்கிறார். மேலும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமக்கும் 850 கோடி ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இதன் மூலம் தோனிக்கு பல்வேறு வருமானம் வந்திருக்கிறது. மேலும் இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு தனது மாமியாரை தோனி செய்தார் என்று ரசிகர்களும் குழம்பி வருகின்றனர்.
அனுபவம் இல்லாத ஒரு நபரை தோனி ஏன் நியமித்தார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தகுதி வாய்ந்த பலர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தோனி இந்த முடிவு ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தோனியின் இந்த நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஸியும் மாமியார் சீலா சிங்கும் இணைந்து தான் கவனித்து வருகிறார்கள். இதனால் தோனியின் மாமியார் சொத்து மதிப்பு 850 கோடி ரூபாய் வரை இருப்பதாக பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.