இந்திய அணியில் மாற்றம்.. டிராவிட் செய்வது தவறா? 2011 உலக கோப்பைக்கு முன் தோனி செய்தது தெரியுமா?

0
1092

2023 ஆம் ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 60 நாட்கள் என்ற அளவில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் டிராவிட் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார்.

குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை களம் இறக்காமல் வெளியே உட்கார வைத்தார். இந்த சூழலில் இசான் கிஷனை தொடக்க வீரராகவும் சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோரை நடுவரிசையிலும் டிராவிட் களமிறக்க வைத்தார். அவ்வளவு ஏன் அக்சர் பட்டேல் கூட பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களம் இறக்கினார். இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்கும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்பு இப்படி ஒரு மாற்றம் தேவையா என ரசிகர்கள் டிராவிட்டை பொளந்தனர். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பு தோனி எவ்வாறு யுக்திகளை கையாண்டார் என்று உங்களுக்கு தெரியுமா?

அதன்படி இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்பு கடைசியாக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கியது முரளி விஜய் தான். ஆம் முரளி விஜயை பேக்கப் தொடக்க வீரராக பயன்படுத்த தோனி எடுத்த முயற்சி அது.

ஆனால் முரளி விஜய் அந்தத் தொடரில் கடுமையாக தடுமாறினார். இதனால் அவர் உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படவில்லை. இதேபோன்று 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்புக்கு முன் கடைசியாக இந்திய அணி விளையாடிய ஆட்டத்தில் யார் தொடக்க வீரர் தெரியுமா?

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இரு அணிகளும் இரண்டு ஆட்டங்களில் வென்ற நிலையில் கடைசி ஆட்டத்தில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும் நிலை இருந்தது. இந்த சூழலில் தோனி ,சச்சின், சேவாக்கிற்கு ஓய்வு வழங்கிவிட்டு ரோகித் சர்மாவையும், பார்த்தீவ் பட்டேலையும் தான் தொடக்க வீரராக களம் இறக்கினார்.

இது அப்போது கடும் விமர்சனத்தை பெற்றது. ஆனால் தோனி செய்த மாற்றம் எதுவுமே உலகக்கோப்பை தொடரில் இல்லை. விஜய், பார்த்திவ் பட்டேல், ரோகித் சர்மா ஆகியோரெல்லாம் உலகக்கோப்பை தொடருக்கு அப்போது சேர்க்கப்படவில்லை. இதே போன்ற ஒரு பிளானை தான் டிராவிட் தற்போது கையாண்டு வருகிறார். எனவே நமது ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை பார்ப்பது நலம்.