2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

0
522
Mohammad Rizwan and Joe Root

2021 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகள் அவ்வளவாக நடைபெறவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டு நடந்த சர்வதேச போட்டிகளில், ஒவ்வொரு அணி மத்தியிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலை நாம் தற்பொழுது இந்த கட்டுரையில் பார்ப்போம்

முஹம்மது ரிஸ்வான் – 1915 ரன்கள் ( பாகிஸ்தான் )

கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக 29 டி20 போட்டிகளில் 1326 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரரும் இவர்தான். அதேபோல 6 ஒருநாள் போட்டிகளில் 134 ரன்கள், 9 டெஸ்ட் போட்டிகளில் 455 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச அளவில் 1915 ரன்கள் குவித்து முஹம்மது ரிஸ்வான் பாகிஸ்தான் வீரர்கள் மத்தியில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ஜோ ரூட் – 1855 ரன்கள் ( இங்கிலாந்து )

கடந்த ஆண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் 1708 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் வீரர்கள் மத்தியில் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இவர்தான். டெஸ்ட் போட்டிக்கு அடுத்தபடியாக 3 ஒருநாள் போட்டிகளில் 147 ரன்கள் குவித்து மொத்தமாக சர்வதேச அளவில் கடந்த ஆண்டு 1855 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் முதலிடத்தில் ஜோ ரூட் இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா – 1420 ரன்கள் ( இந்தியா )

11 டெஸ்ட் போட்டிகளில் 906 ரன்கள், 3 ஒருநாள் போட்டிகளில் 90 ரன்கள் மற்றும் 11 டி20 போட்டிகளில் 424 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 1420 ரன்கள் குவித்து இந்திய வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் ஷர்மா இருக்கிறார்.

4.பவுல் ஸ்டிர்லிங் – 1187 ரன்கள் ( அயர்லாந்து )

14 ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு இவர் 705 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இவர்தான். ஒருநாள் போட்டியை தொடர்ந்து 16 டி20 போட்டிகளில் 482 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 1187 ரன்கள் குவித்து அயர்லாந்து வீரர்கள் மத்தியில் பவுல் ஸ்டிர்லிங் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அய்டன் மார்க்ரம் – 1116 ரன்கள் ( தென்னாபிரிக்கா )

6 டெஸ்ட் போட்டிகளில் 346 ரன்கள், 8 ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் மற்றும் 18 டி20 போட்டிகளில் 570 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 1116 ரன்கள் குவித்து தென்ஆப்பிரிக்க வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் மத்தியில் மார்க்ரம் முதலிடத்தில் இருக்கிறார்.

லித்தோன் தாஸ் – 1058 ரன்கள் ( வங்கதேசம் )

7 டெஸ்ட் போட்டிகளில் 594 ரன்கள், 11 ஒருநாள் போட்டிகளில் 256 ரன்கள் மற்றும் 17 டி20 போட்டிகளில் 208 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 1058 ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லித்தோன் தாஸ் முதல் இடத்தில் இருக்கிறார்.

தேவான் கான்வே – 1032 ரன்கள் ( நியூசிலாந்து )

3 டெஸ்ட் போட்டிகளில் 379 ரன்கள், 3 ஒருநாள் போட்டிகளில் 225 ரன்கள் மற்றும் 14 டி20 போட்டிகளில் 428 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 1032 ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் கான்வே இருக்கிறார்.

திமுத் கருணாரத்னே – 986 ரன்கள் ( இலங்கை )

7 டெஸ்ட் போட்டிகளில் 902 ரன்கள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் 84 ரன்கள் என கடந்த ஆண்டு சர்வதேச அளவில் மொத்தமாக 986 ரன்கள் குவித்து இலங்கை வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரராக திமுத் கருணாரத்னே முதலிடத்தில் இருக்கிறார்.

எவின் லூயிஸ் – 726 ரன்கள் ( மேற்கிந்தியத் தீவுகள் )

6 ஒருநாள் போட்டிகளில் 237 ரன்கள் மற்றும் 18 டி20 போட்டிகளில் 489 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 726 ரன்கள் குவித்து மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்தவராக முதலிடத்தில் எவின் லூயிஸ் இருக்கிறார்

மிட்ச்சேல் மார்ஷ் – 684 ரன்கள் ( ஆஸ்திரேலியா )

3 ஒருநாள் போட்டிகளில் 57 ரன்கள் மற்றும் 21 டி20 போட்டிகளில் 627 ரன்கள் என மொத்தமாக கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 684 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரராக மிட்செல் மார்ஷ் முதல் இடத்தில் இருக்கிறார்.