உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அதிகபட்ச டிக்கெட் விலை இத்தனை லட்சமா அடேங்கப்பா

0
126
WTC Final 2021 Tickets

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

கடந்து வந்த பாதை:

ஆஸ்திரேலியா அணியை 2-1 என வீழ்த்தி சாதனை படைத்தப் பிறகும் சொந்த மைதானத்தில் இங்கிலாந்து அணியுடனான சீரிஸ்ஸில் 2 போட்டிகளில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய சூழல் இந்திய அணிக்கு இருந்தது. காப்பாவில் செய்தது போலவே அகமதாபாத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஷபம் பண்ட. இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 0-3 என மோசமாக தோற்ற பிறகு நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாத என அனைவரும் நினைத்தனர். ஆனால் அடுத்த தொடரில் சொந்த ஊர் ஆதிக்கத்தை செலுத்தி 2-0 என இந்திய‌ அணியை வீழ்த்தியது. அதன் பிறகு மேற்கிந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறப்பான இரட்டைச் சதத்தை விளாசி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் கேப்டன் கேன் வில்லியம்சன்.

சவுத்தாம்ப்டன்னில் ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை இந்த இறுதிப் போட்டி நடைபெறம் என் ஐசிசி அறிவித்தது. இதற்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்கப்பட்டன.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், இறுதிப் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியைக் காண இரண்டு வருடங்களாக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை டிக்கட்டின் விலை மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதிகபட்ச டிக்கெட் விலை 2 லட்சம்:

WTC Final 2021 India and NZ

வாக்குச்சீட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத டிக்கெட்டுகளை அதிர்ஷ்டசாலிகளுக்கு ஐசிசி வழங்கியது. மீதம் இருந்த டிக்கெட்டுகளை ஏஜென்டுகள் வழியாக விற்பனை செய்தனர்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை டிக்கெட்டுகளளின் பெரிய தொகைக்கு விலை போனது என அந்த ஏஜென்ட் செய்தியார்களிடம் கூறினார். டிக்கெட்டுகளின் வகைக்கேற்ப கூடுதல் வசதிகளும் செய்யப்படுகின்றன. ஒரு சில தொகுப்பில், இரவு மைதான விடுதிகளில் தங்கும் வசதிகளும் உள்ளன.

இந்த இறுதிப் போட்டிக்கு அதிகபட்ச டிக்கெட் விலை ₹2 லட்சம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போல 5 நாட்களுக்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

என்னதான் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும், முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உண்டாக்கியது.

இரண்டாம் நாள் தான் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணி சிறப்பாகவே பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் மழை அடிக்கடி குறிக்கிடுகிறது. சமூக வலைதளங்கள் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வெறுப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. ரசிகர்களின் ஏமாற்றத்தை ஈடுகட்டும் வகையில் ஐசிசி, ஒரு ரிசர்வ் தினத்தை ஒதுக்கியுள்ளது. ஜூன் 23ஆம் தேதி ரிசர்வ் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ரிசர்வ் தினத்திற்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் வருவதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.