இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிவுக்கு பின்னால் யார் காரணமாக இருந்தார்கள் என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் பேசியிருக்கிறார்.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறு இருக்கிறது? இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் யார் சிறப்பாக விளையாட வேண்டியது இருக்கும்? என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இவர்தான் காரணம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக யாரும் எதிர்பார்க்காத நிலையில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை விட மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் அவருடைய திடீர் ஓய்வுக்கு என்ன காரணமாக இருக்கலாம் என்று பலரும் குழப்பமாக இருந்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாண்டி பனேசர் பேசும் பொழுது ” எல்லோரும் எதிர்பார்த்தது போல இங்கிலாந்தில் விராட் கோலி விளையாடுவார் என்று நானும் நினைத்தேன். அவருடைய இந்த முடிவு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் விளையாடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் ஆனால் தேர்வுக் குழுவில் இருந்து ‘ நீங்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் சரியாக ஆடாவிட்டால் நீக்கப்படுவீர்கள்’ என்று கூறி இருக்கலாம். எனவே அவர் யோசித்து விட்டு ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி கொடுக்கலாம் என்று விலகி விட்டார்”
இந்த இருவர் சரியாக ஆட வேண்டும்
“இங்கிலாந்தில் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு என்பது இருக்கத்தான் செய்கிறது. அது கருண் நாயர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து அமையும். அவர் தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கிறார். மேலும் மிடில் ஆர்டரில் கேப்டன் கில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தும் இது அமையும். கவுண்டி அணிகளுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதித்தை அப்படியே தொடர்ந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் வெற்றி பெறலாம்”
இதையும் படிங்க: ஒரே மாநிலம்.. கருண் நாயரை பார்த்து கேஎல் ராகுலுக்கு பயமா?.. கெவின் பீட்டர்சன் பதிவால் ஏற்பட்ட குழப்பம்
“அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் பொழுது அவர்கள் அப்படியே உறைந்து போனால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் இது பெரிய மேடை மற்றும் பெரிய மக்கள் முன்னால் இந்தியாவுக்காக விளையாடுவது அழுத்தமாக இருக்கும். இது கீழ் மட்டத்தில் சிறிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது போல இருக்காது. எனவே இதைப் பொறுத்து இந்திய அணி காண வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






