“பணத்தால விசுவாசத்தை வாங்க முடியாது!” – மும்பை ஹர்திக்கை வம்பிழுக்கும் பதிரனா!

0
629
Pathirana

2024 17-வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. மேலும் வீரர்களை டிரேடிங் செய்து கொள்ள கடைசி நாளாக டிசம்பர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் உலகத்தைச் சுற்றி வீரர்கள் டிரேடிங் செய்யப்படுவது தான் தற்பொழுது மிகப்பெரிய காரசாரமான விவாதமாக மாறி வருகிறது.

- Advertisement -

காரணம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் சீசனில் கோப்பையை வென்றதோடு, இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு கேப்டனாக சென்ற ஹர்திக் பாண்டியா, திடீரென மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிக்கொண்டார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சம்மதத்தோடு அவர் மாறியதாக வெளியில் பேசப்பட்டாலும் கூட, அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல விரும்பிய காரணத்தினால், அதற்கு மேல் அவரை தங்கள் அணியில் வைத்திருப்பது சரிவராது என்றே குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் வெளியே விட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் விளையாட விரும்பாத ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் விடாமல், அவர்களுடைய கேப்டனுக்கு சரியான மரியாதை கொடுத்து அனுப்பி வைத்திருப்பது அவர்களுடைய பெருந்தன்மை.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஐபிஎல் அணி நிர்வாகம் முகமது சமியை விதிமுறைகளை மீறி தங்கள் அனைத்து அழைத்ததான குற்றச்சாட்டை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் முழு விபரத்தை தெரிவிக்கவில்லை.

எனவே இப்படியான காரணங்களால் ஐபிஎல் உலகம் பரபரப்பாக இருக்கும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வேகபந்துவீச்சாளர் சிஎஸ்கே அணிக்கு விளையாடும் பதிரனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய பதிவில் அவர் “எந்தப் பணத்தாலும் விசுவாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது!” என்று கூறியிருக்கிறார். இவரையும் எந்த அணியாவது விதிமுறையை மீறி அணுகியதா இல்லை இவர் மும்பை மற்றும் ஹார்திக் பாண்டியாவை உள்குத்தாக பேசுகிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் தற்பொழுது சமூக வலைதளத்தில் இது பரபரப்பாக மாறி வருகிறது!