சீண்டிப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் – சிங்கம் போல் பதிலுக்கு பாய்ந்த சிராஜ்

0
1702
Mohammed Siraj Test Cricket

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெல்ல முடியாது என்று இருந்த போட்டியை வெற்றிகரமாக இந்திய அணிக்கு ஜெயித்துக் கொடுத்தனர். தற்போது 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

பல நாட்கள் கழித்து விராட் கோலி டாஸை வென்றார். ஆனால் தாஸ் வென்றதை தவிர இந்திய அணிக்கு வேறு எதுவும் சிறப்பாக அமையவில்லை. கடந்த போட்டியில் சதம் கடந்த கேஎல் ராகுல் இந்த முறை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் புஜாரா இந்த முறையும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்பு வந்த கேப்டன் விராத் கோலி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடுவது போன்று ஆரம்பித்தாலும் வழக்கம்போல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை அடிக்க முயன்று அவுட்டானார்.

- Advertisement -

அதன் பின்பு மற்ற வீரர்கள் எல்லாம் வருவதும் போவதுமாக இருந்தபடியினால் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரி பேட்டிங் தான் சரியில்லை பந்துவீச்சு சிறப்பாக இருக்குமா என்று பார்த்தால், அதிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் எளிதில் ரன்கள் சேர்க்கும் முறையில் மிகவும் தொல்லை தராத பந்துகளை அதிகமாக இந்திய வீரர்கள் வீசினர். அதுவும்போக ரோகித் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இப்படி நேற்று ஒரு சிறிய விஷயம் கூட இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை.

இதனால் மிகவும் உற்சாகம் அடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் கடந்த லார்ட்ஸ் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த முகமது சிராஜை சீண்டி பார்த்தனர். ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் பில்டிங் செய்வதற்காக சிராஜ் ரசிகர்கள் பக்கத்தில் போய் நின்றார். இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்ததால் ஸ்கோர் என்ன என்று இந்திய அணியை மட்டம் தட்டும் விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் அதை நோக்கி கேலியாக கேட்டனர். அதற்கு சிராஜ் சைகை மூலமாக ஸ்கோர் 1-0 எனக் கூறினார். அதாவது இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது என்று சைகை மூலம் கூறி இங்கிலாந்து ரசிகர்களை வாயடைக்க வைத்தார் சிராஜ்.

- Advertisement -

இங்கிலாந்து அணி என்னதான் வலிமையான நிலையில் இருந்தாலும், இன்று இங்கிலாந்தை விரைவாக ஆல் அவுட் ஆக்கி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக ஆடினால் இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்கலாம்.

- Advertisement -