“முகமது சிராஜ் இப்படித்தான் விக்கெட் எடுக்கிறார்.. நான் ரொம்ப மதிக்கிற பவுலர்!” – ஏபி டிவிலியர்ஸ் பாராட்டு!

0
1592
Siraj

நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கின்றன. பங்கேற்கக் கூடிய 10 அணிகளில் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் கொண்ட அணியாக இந்திய அணிதான் இருக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அப்ரைட் சீமில் புதிய பந்தில் மிரட்டக்கூடிய உலகத்தரம் வாய்ந்த முகமது சமி பெஞ்சில் இருக்கும் அளவுக்கு, இந்திய அணியின் பௌலிங் யூனிட் வலிமையாக இருக்கிறது.

- Advertisement -

வேற எந்த அணியாக இருந்திருந்தாலும் முகமது சமிக்கு கட்டாயம் விளையாடும் அணியில் இடம் கிடைத்திருக்கும். ஆனால் இந்திய அணியில் அவர் வெளியில் அமர்ந்திருக்க அவருடைய ஜூனியர் முகமது சிராஜ் விளையாடும் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் அவர் ரண்களை வாரி வழங்கிய நேரத்தில் ரசிகர்களின் பெரிய கேலிக்கு உள்ளானார். ஆனால் இன்று உலக பேட்ஸ்மேன்களின் தூக்கத்தைக் எடுக்கக்கூடிய பந்துவீச்சாளராக உயர்ந்திருக்கிறார். நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் அவரது பந்து வீச்சு செயல்பாட்டை பார்த்து, அவரை எப்படி உலகக் கோப்பையில் எதிர்கொள்வது என, மற்ற அணிகள் யோசிக்க ஆரம்பித்து இருக்கும் என்பது உண்மை.

முகமது சிராஜ் செயல்பாடு பற்றி பேசி உள்ள ஏபி டிவில்லியர்ஸ் கூறும்பொழுது
“அவரிடம் தனித்து நிற்கக் கூடிய விஷயம் அவரது மனப்பான்மைதான். மனப்பான்மை உங்களை எப்படி உயர்த்தும் என்பது குறித்து நாம் ஏற்கனவே பேசி இருக்கிறோம்.

- Advertisement -

நீங்கள் எப்பொழுதும் அதை கைவிடாமல் இருந்து செயலாற்றும் பொழுது, அது உங்களை களத்தில் நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. உங்கள் வீரர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த இடத்திலிருந்து தான் களத்தில் நீங்கள் சில புத்திசாலித்தனமான வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறீர்கள்.

எந்த பந்துவீச்சாளர் விட்டுக் கொடுக்காமல் போராடுகிறாரோ அவரை நான் எப்பொழுதும் மதிப்பேன். அவர்கள் எப்பொழுதும் ஒவ்வொரு பந்தையும் மிகச் சிறப்பாக முடிக்க நினைப்பார்கள். முகமது சிராஜ் அப்படிப்பட்ட பந்துவீச்சாளராகத்தான் இருக்கிறார்.

அவர் தன்னுடைய ஷார்ட் பந்தை வீசுவதற்கு பயப்படுவதே கிடையாது. அவர் ஒவ்வொரு முறையும் உங்களுடைய முகத்தில் இருக்கிறார். அவர் ஒவ்வொரு பந்திலும் உங்களை வெளியேற்ற முயற்சி செய்கிறார். பேட்டர்கள் அதை நிச்சயமாக உணர முடியும். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை நிச்சயமாக அதை உணர்ந்தது.

அவருக்கு அந்த போட்டியில் சில மென்மையான விக்கெட்டுகள் கிடைத்தது. இறுதிப் போட்டியின் அழுத்தத்தால் அப்படி நடந்திருக்கலாம். ஆனால் இதில் தனித்து நிற்கும் விஷயம் என்னவென்றால், அவர் விக்கெட்டுக்கு தொடர்ச்சியாக முயற்சி செய்கிறார். அவருடைய அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. அவரைப் பற்றி நான் சொல்வதாக இருந்தால் அவர் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்!” என்று கூறியிருக்கிறார்!