இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு முக்கியமான காரணமாக இருந்த முகமது சிராஜ் போட்டியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும் பொழுது ஹாரி புரூக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் தவறவிட்டார். இதன் காரணமாகவே போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது குறிப்பிடத்தக்கது.
கணிப்பை உடைத்த சிராஜ்
நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டது. எனவே அவர் விளையாடும் ஒன்று போட்டிகளை இந்தியா வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் எனவும், அவர் விளையாடாத போட்டிகளில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினம் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.
இதில் முக்கிய விஷயமாக விளையாடிய மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளை இந்திய அணி தோற்று ஒரு போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. அவர் விளையாடாத இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. இதற்கு முக்கிய காரணமாக முகமது சிராஜ் இருந்திருக்கிறார். பும்ரா இல்லாத நிலையில் அவருடைய பந்துவீச்சு அற்புதமாக அமைந்தது.
அவரை நம்புகிறேன்
இதுகுறித்து முகமது சிராஜ் பேசும்பொழுது ” உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய உணர்ச்சிகளை விவரிக்கவே முடியாது. ஏனென்றால் நான்காவது நாள் நான் புரூக் கேட்ச்சை விட்டிருந்தேன். அப்பொழுது நான் ஹோட்டலுக்கு போக செல்லும் பொழுது அது குறித்து தான் யோசித்து கொண்டு இருந்தேன். நான் எப்படி இப்படி செய்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் சரியாக செய்திருந்தால் எங்கள் அணி ஹோட்டலில் குளிர்ச்சியாக இருந்திருக்கும்”
இதையும் படிங்க : எங்களை விமர்சனம் பண்றதுக்கு முன்னாடி.. உங்க அணியின் நிலமையை பாருங்க.. இங்கி முன்னாள் வீரருக்கு ஹர்பஜன் சிங் பதிலடி
” இதன் விளைவை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக கடவுள் ஏற்படுத்திய திட்டம் என்று நான் நினைக்கிறேன். அடுத்த நாள் காலையில் எழுந்து என்னுடைய மொபைலில் நம்பு என்கின்ற வால்பேப்பரை வைத்தேன். என்னால் செய்து முடிக்க முடியும் என்று நம்பினேன். மேலும் இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அனைவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்தார்கள். மேலும் நான் பும்ரா பாயை மிஸ் செய்தேன். அவருக்கென ஒரு வித்தியாசமான இருப்பு களத்தில் இருக்கிறது. நான் எப்பொழுதும் அவரையும் என்னையும் மட்டுமே நம்புவேன்” என்று கூறி இருக்கிறார்.






