டி20ல் பும்ராவிற்கு மாற்று வீரர் அறிவிப்பு!

0
3700

காயம் காரணமாக விலகியுள்ள பும்ராவிற்கு மாற்று வீரராக முகமத் சிராஜ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக சில தொடர்கள் பங்கேற்கவில்லை. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த இவர் குணமடைந்ததால், டி20 உலக கோப்பைக்கு எடுக்கப்பட்டார். மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் எடுக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் பும்ரா விளையாடினார். அதன் பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பும்ரா, முதுகுப் பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டது என்று மருத்துவ குழுவிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி பும்ராவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், இவருக்கு சில காலம் சிகிச்சை மற்றும் ஓய்வு தேவை என பிசிசிஐ தரப்பிடம் தெரிவித்திருந்தனர். உடனடியாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெறும் டி20 தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஆவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் இருவரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் டி20 உலக கோப்பை தொடர்களில் பும்ரா விலகினால் ரிசர்வ் வீரர்கள் வரிசையில் இருக்கும் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரில் ஒருவர் உள்ளே எடுத்து வரப்படலாம். ரிசர்வ் வரிசையில் முகமத் சிராஜ் வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -