19 ஓவர் தெறிக்கவிட்ட முகமது ஷமி.. 3 விஷயங்கள் டாப் கிளாஸ்.. ஆஸி தொடருக்கு ரெடி.. இந்திய முகாம் மகிழ்ச்சி

0
1094
Shami

நடப்பு ரஞ்சி சீசனில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணிக்காக களம் இறங்கிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சிறப்பான பந்துவீச்சால் பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார்.

நேற்று ரஞ்சி சீசனில் இந்தூர் மைதானத்தில் பெங்கால் மற்றும் மத்திய பிரதேஷ் மோதிக்கொண்ட போட்டி ஆரம்பித்தது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற மத்திய பிரதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக அணிக்காக முகமது ஷமி நேற்று களம் இறங்கினார்.

- Advertisement -

திடீரென மாறிய நிலவரங்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என ஆஸ்திரேலியா தரப்பில் இருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இது இந்திய அணியின் தன்னம்பிக்கையை உடைப்பதாகவும் அமைந்திருந்தது. பும்ராவை தவிர இந்திய அணிகள் இடம்பெற்ற மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் நம்பிக்கை கொடுக்கக் கூடியவர்களாக தெரியவில்லை.

இப்படியான நிலையில் நேற்று முன்தினம் முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேசம் அணிக்கு எதிராக களம் இறங்குகிறார் என்று செய்தி வெளியானது. இந்திய அணி நிர்வாகத்தை இந்த செய்தி மகிழ்ச்சி படுத்திய பொழுதும் கூட, அவர் போட்டியில் எத்தனை ஓவர்கள் பந்து வீசுவார்? எவ்வளவு உடல் தகுதி உடன் இருக்கிறார்? என்பது குறித்த சந்தேகங்கள் இருந்தது.

- Advertisement -

சந்தேகத்தை தீர்த்த முகமது ஷமி

இந்த நிலையில் மத்திய பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷ்மி சிறப்பான உடல் தகுதியை நிரூபித்தார். இந்த போட்டியில் அவர் மொத்தம் 19 ஓவர்கள் பந்து வீசினார். இதன் மூலம் உடல் தகுதி எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் முகமது ஷமி 19 ஓவர்கள் பந்து வீசியது உடன் ஓவருக்கு 2.84 ரங்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் சரியான லைன் மற்றும் லென்த்தில் தொடர்ந்து பந்துவீசி இருக்கிறார். நீண்ட நாள் கழித்து திரும்பி வந்தாலும் அவருடைய ரிதம் சிறப்பாக இருக்கிறது என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 4வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. யான்சென் அதிரடியால் ஒரு முக்கிய மாற்றம்.. சூர்யா அணி தொடரை வெல்லுமா?

இந்தப் போட்டியில் முகமது சாமி மொத்தம் 19 ஓவர்கள் பந்து வீசி நான்கு மெய்டர்கள் செய்து 54 ரன்கள் மட்டும் விட்டு தந்ததோடு நான்கு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனால் வழக்கமான அவரது பவுலிங் ஸ்ட்ரைக்கும் சிறப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமி திரும்புவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகிவிட்டது!

- Advertisement -