4வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. யான்சென் அதிரடியால் ஒரு முக்கிய மாற்றம்.. சூர்யா அணி தொடரை வெல்லுமா?

0
1336
Hardik

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்று பார்க்கலாம்.

நாளை இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நான்காவது மற்றும் தொடரின் கடைசி டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றும், தென் ஆப்பிரிக்கா அணிவென்றால் தொடரை சமன் செய்யும் சூழ்நிலை நிலவுகிறது.

- Advertisement -

மூன்று ஸ்பின்னர் திட்டம் எதிர்காலத்திற்கு உதவுமா?

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. எனவே மூன்று பிரதான சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் யோசிக்கிறது. ஆனால் அப்படி யோசிக்கும் பொழுது, இந்திய அணியின் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் பேட்டிங் செய்யக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் இந்திய டி20 அணியில் கட்டாயம் டி20 உலகக் கோப்பையில் இருப்பார்கள். எனவே மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து செல்வது கடினம் ஆகிறது. எனவே அக்சர் படேல் மற்றும் கூடுதலாக ஒரு சுழல் பந்துவீச்சாளரை வைத்துக் கொள்ளவே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

யான்செனால் ஏற்பட இருக்கும் மாற்றம்

நேற்றைய போட்டியில் இந்திய அணி சுலபமாக வெல்லும் நிலையில் இருந்து இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. தென் ஆப்பிரிக்காவின் யான்சென் 16 பந்தில் அதிரடி அரை சதம் அடித்து மிரட்டினார். இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பிரச்சினையாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு சரியான முறையில் வந்து வீசவில்லை.

இதன் காரணத்தால் இந்திய அணி நாளை தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேகப் பந்துவீச்சாளர் யாஸ் தயாலை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இவர் உள்ளே வந்தால் ரவி பிஸ்னாய் நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கம்பீர் ரொம்ப பயந்து இருக்காரு.. வழி தெரியாம என் மேல தூக்கி எறியறாரு – ரிக்கி பாண்டிங் மீண்டும் விமர்சனம்

உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் ஹர்திக் பாண்டியா, ரமன்தீப் சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் யாஸ் தயால்.

- Advertisement -