சிராஜ் உடனடியா இதை மட்டும் செய்யுங்க.. மீதிய வழக்கம் போல ரோகித் பார்த்துப்பார் – முகமத் ஷமி அறிவுரை

0
139
Siraj

தற்போது பவுலிங் பார்ம் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்து வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது சாமி அறிவுரை கூறியிருக்கிறார்.

நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் பந்துவீச்சு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு வீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தபொழுதும் கூட அவரால் வெட்கட் கைப்பற்ற முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கியது.

- Advertisement -

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து முகமது சிராஜ் பந்துவீச்சு கவலை அளிப்பதாகவே இருந்து வருகிறது. அதற்கு முன்பாக அவர் பந்துவீச்சில் சில மாறுதல்களை செய்து மிகச் சிறப்பான முறையில் பும்ரா மற்றும் ஷமி இல்லாத காலகட்டத்தில் இந்திய அணிக்கு பலத்தை சேர்த்தார்.

இந்த நிலையில் பும்ரா மற்றும் ஷமி இருவருமே இந்திய அணிக்கு திரும்பி வந்த பொழுது முகமது சிராஜ் பந்துவீச்சு ஃபார்ம் அவரை விட்டுப் போய்விட்டது. தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சு இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

முகமது சிராஜ் இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து முகமது ஷமி கூறும் பொழுது “முகமது சிராஜ் புதியவர் கிடையாது, அவர் அனுபவமானவர். சில சமயங்களில் நாம் கவனம் செலுத்துகின்ற விஷயம் நடக்காது. தற்போது அவர் செய்ய நினைக்கும் விஷயங்கள் நடக்காத காலத்தில் இருக்கிறார். அவர் விக்கெட் எடுக்க விரும்புகிறார் ஆனால் நடக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் எட்ஜ் கேட்ச் ஆக மாறுவதில்லை”

“இப்படியான சூழ்நிலை பந்துவீச்சாளர்களாகிய எல்லோருக்குமே வரும் ஆனால் இதற்கு நாம் விரக்தி அடைய தேவை இல்லை. அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அந்த இடத்தில் பந்து வீச வேண்டும். பிறகு நீங்கள் வெற்றி பெற தொடங்கியதும் உங்களை யாராலும் தடுக்க முடியாது”

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட்.. ஸ்மித் இடத்துக்கு இவரை கொண்டு வாங்க.. நான் கேப்டனா இருந்தா இதை செய்வேன் – மைக்கேல் கிளார்க் பேட்டி

“கேப்டனாக ரோஹித் சர்மாவை பொறுத்தவரையில் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சுதந்திரத்தை கொடுக்க கூடியவர். நான் அவர் தலைமையில் விளையாடிய பொழுது இதை உணர்ந்திருக்கிறேன். எனவே முகமது சிராஜுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நல்ல சுதந்திரம் கொடுப்பார். ஆகையால் முகமது சிராஜ் எது குறித்தும் கவலைப்படாமல் தொடர்ந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -