இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் கேப்டனாக இருந்தால் நெத்து இடத்தில் துவக்க ஆட்டக்காரராக ஒரு குறிப்பிட்ட வீரரை கொண்டு வருவேன் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் பிளாக் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்ட பிறகு, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் துவக்க வீரருக்கான இடத்தில் திடீரென ஸ்டீவ் ஸ்மித் கொண்டுவரப்பட்டார். அவர் 8 இன்னிங்ஸ்களில் துவக்க இடத்தில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். எனவே இந்திய அணிக்கு எதிராக ஒரு புதிய தொடக்க ஆட்டக்காரர்களை கொண்டு வர வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு இருக்கிறது.
கேமரூன் கிரீனை வைத்து பின்னப்பட்ட திட்டம்
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் தங்களுடைய வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் கேமரூன் கிரீன் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவருமே பிளையிங் லெவனில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதன் காரணமாக டேவிட் வார்னர் இடத்திற்கு ஒரு புதிய தொடக்க ஆட்டக்காரரை அவர் கொண்டு வரவில்லை. அந்த இடத்திற்கு அனுபவ வீரர் ஸ்மித்தை விளையாட வைத்தார்.
தற்போது கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து வெளியில் இருக்கிறார். மேலும் அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக தற்போது கேமரூன் கிரீனை வைத்து பின்னப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
நான் கேப்டனாக இருந்தால்…
இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறும்பொழுது “சாம் கான்ஸ்டாஸ் திறமையான இளம் வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வெறும் இரண்டு போட்டிகளை வைத்து மட்டுமே அவருக்கு ஆஸ்திரேலியா அணியில் துவக்க வீரர் இடத்தை கொடுக்க முடியாது. அவர் இரண்டு சதங்கள் உடனடியாக அடித்திருப்பது மட்டுமே போதாது. கடந்த நான்கு ஆண்டுகளில் பேன் கிராப்ட் மற்றும் ஹாரிஸ் போன்றவர்கள் 12 சதங்கள் அடித்து அங்கு இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : இந்திய வீரர் கிட்ட இப்படித்தான் நடப்பியா?.. பையை எடுத்துக்கிட்டு கிளம்பு – பாக் பசித் அலி விமர்சனம்
“இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். வார்னருக்கு அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் துவக்க வீரருக்கான இடத்தை பெறுவதில் இவர்களே முன்னணியில் இருக்கக்கூடியவர்கள். நிச்சயமாக நான் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்தால் இவர்கள் இருவரில் ஒருவரைத்தான் துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்வேன். ஆனால் தற்போதைய நிலைமை எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அவர்கள் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் யாரை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.






