ஒரே போட்டியில் 8 விதவிதமான மாஸான சாதனைகளை படைத்த முகமது சமி.. தனி ஒரு இந்திய பந்துவீச்சாளராக முத்திரை!

0
1874
Shami

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த போட்டியாக இலங்கை அணிக்கு எதிராக மோதிய போட்டி கிடைத்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் இழந்தது பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சதம் அடிக்கக் கூடிய வாய்ப்பில் இருந்து கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் மூவரும் சதம் அடிக்காமல் போனது இந்திய ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி 357 ரன்கள் குவித்த போதும் இந்திய ரசிகர்களுக்கு பெரிய திருப்தி இல்லாத நிலையில், இதையெல்லாம் சரி செய்யும் விதமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் உலகத் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்திருக்கிறார்கள்.

இன்று மட்டும் முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக ஒட்டுமொத்தமாக சேர்த்து எட்டு சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று உச்ச நாளாக அமைந்திருக்கிறது.

முகமது சமி இன்று ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை தொடரில் 45 விக்கெட் கைப்பற்றி, உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் ஜாகீர் கான் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத்தை முந்தி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் நான்கு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் மூன்று முறை ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்த ஹர்பஜன்சிங் சாதனை உடைக்கப்பட்டு இருக்கிறது.

மிக முக்கியமாக உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை நான்கு விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக தன் பெயரை பதித்திருக்கிறார். மொத்தம் ஏழு முறை உலகக் கோப்பை தொடர்களில் நான்கு மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

உலகக்கோப்பையில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மூன்று முறை ஐந்து விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் சேர்ந்திருக்கிறார். இன்னொரு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றினால் இவரே இதில் உலக சாதனை படைத்தவராக மாறுவார்.

உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய இந்திய வேகப்பந்துவீச்சாளராக மூன்று முறை ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்டநாயகன் விருது வாங்கிய முதல் பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

மூன்று உலகக் கோப்பை தொடர்களில் பத்து விக்கெட்களுக்கு மேல் மூன்று முறை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார்.

ஒரே உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஒரே இந்திய பந்துவீச்சாளராக தன் பெயரை உச்சத்தில் பதிவு செய்து தனிச் சாதனையை செய்திருக்கிறார். இப்படி ஒரே போட்டியில் எட்டு தனி சாதனைகளை உருவாக்கி அசத்தியிருக்கிறார் முகமது சமி!