ஆஸி பிளேயர்ஸ் எப்படினு 2003லயே தெரியும்.. அவங்க கையில பவுலர் அடி வாங்கினா அவ்வளவுதான் – முகமது கைஃப் பேட்டி

0
184
Kaif

நேற்று ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் 9.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து லக்னோ அணிக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை கொண்டு வந்தார்கள். இதுகுறித்து முகமது கைஃப் பேட்டி அளித்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் 166 ரன்கள் இலக்கை துரத்தும் பொழுது ஹைதராபாத் அணியில் இந்த இரண்டு துவக்க ஆட்டக்காரர்களும் பவர் பிளேவில் 107 ரன்கள் குவித்ததோடு, அடுத்த 3.4 ஓவர்களில் 62 சேர்த்து மொத்தமாக போட்டியையும் முடித்து விட்டார்கள். தற்பொழுது இவர்களது அதிரடியான பேட்டிங் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கேப்டனாக இருக்கிறார். ஹெட் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரராக இருக்கிறார். இவர்கள் ஒரே அணியில் இருப்பதால் இவர்களுடைய இன்டெண்ட் தெளிவாக இருக்கிறது. 2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய பொழுது வானம் மேகமூட்டமாக இருந்தது. கங்குலி அப்பொழுது எங்களிடம் நாம் வெல்வோம் என்று கூறினார். ஆனால் ஆஸி வீரர்கள் 360 ரன்கள் எடுத்தார்கள்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் இப்படி விளையாடுவது இது முதல் முறை கிடையாது. அவர்களை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. இவர்களுடைய அதிரடி பேட்டிங் பந்துவீச்சாளர்களின் கேரியரை முடித்து வைத்து விடும். இவர்கள் அடிக்கின்ற அடியில் அடுத்த போட்டியில் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அப்படித்தான் பேட்டிங் செய்கிறார்கள்.

ஒரு பெரிய போட்டியில் லக்னோ அணி இடம் பார்க்க வேண்டிய இன்டெண்ட்டை நம்மால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஆறு ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் ஹைதராபாத் ஆறு ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தது. இது வெறும் முரட்டுத்தனமான அடி கிடையாது. இது டாப் கிளாஸ் பேட்டிங். அவர்கள் வலது காலை நகர்த்தி மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக்கிட்ட இந்த 2 விஷயத்துல யுவராஜ் சிங் தெரியறார்.. செலக்டர்ஸ் ஹிட்டர்ஸ் இல்லனு சொல்லாதிங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இந்த போட்டியில் இன்னொரு சோதனையும் நடைபெற்றதாக நான் பார்க்கிறேன். வாழ்வா சாவா போட்டியில் எப்படி விளையாட வேண்டும்? என்று ஹைதராபாத் காட்டி இருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான அறிக்கையை ஹைதராபாத் மற்ற அணிகளுக்கு கொடுத்து இருக்கிறது. அடுத்த போட்டியில் இதே மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட குஜராத் வருகிறது” என்று கூறி இருக்கிறார்.