கொல்கத்தா அணியை இந்த விஷயம் பாதிக்காது.. அவங்க எப்படி போறாங்கனு மட்டும் பாருங்க – சேவாக் பேச்சு

0
86
Sehwag

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் இரண்டு டிராவுடன் சேர்த்து மொத்தம் 20 புள்ளிகள் எடுத்து, கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த அணி குறித்து சேவாக் முக்கியமான விஷயம் ஒன்றைப் பேசியிருக்கிறார்.

கொல்கத்தா அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான விஷயமாக அமைந்தது அவர்களுடைய தொடக்க ஜோடிதான். கம்பீர் மென்டராக வந்ததும் சுனில் நரைனை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்தார். மேலும் ஜேசன் ராய் விலகிய காரணத்தினால் பில் சால்ட் அணியில் சேர்ந்தார்.

- Advertisement -

இந்த ஜோடி ஐபிஎல் தொடரில் எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் சவால் அளித்தது. மேலும் இருவருமே அதிரடியாக விளையாடிய ரன்கள் குவித்தார்கள். பெரும்பாலான போட்டிகளை பவர் பிளே ஓவர்களின் போதே தங்கள் பக்கம் இவர்கள் இழுத்து விட்டார்கள். இது கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் நாடு திரும்பிவிட்டார். இது கொல்கத்தா அணிக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்பொழுது இதுகுறித்து சேவாக் பேசி இருக்கிறார்.

சேவாக் பில் சால்ட் பற்றி கூறும் பொழுது “ஒரு வீரர் இல்லாதது உங்கள் அணியின் மொத்த மதிப்பையும் குறைப்பதாக அமையாது. இங்கு மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். மேலும் கொல்கத்தா அணி பில் சால்ட் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அவர் கொடுத்த துவக்கத்தை நிச்சயம் தவறு விடும்.

- Advertisement -

இதையும் படிங்க : லாரா யுவராஜ் சிங்கின் கலவை இந்த பையன்.. ஜெய்ஸ்வாலுக்கு செஞ்சத இவருக்கும் செய்யுங்க – மைக்கேல் வாகன் பேட்டி

ஆனாலும் பில் சால்ட்டை விட யாராவது முன்னேறி விளையாட முடியும். அப்படி வரக்கூடியவர்கள் செய்ய வேண்டியது ஒரு போட்டியை சரியாக விளையாட வேண்டும் அவ்வளவு தானே? நான் இந்த அளவில் இதை பாசிட்டிவாக தான் பார்க்கிறேன். இப்படியான நேரங்களில் ஒரு வீரர் காயத்தின் காரணமாக வெளியேறும் பொழுது இன்னொரு வீரர் வந்து செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைவது போலத்தான் இதுவும்” என்று கூறியிருக்கிறார்.