தோனி பேட்டிங் வராம தடுக்க ஜடேஜாவுக்கு அப்பீல் செய்யலையா? கோலிக்கு செய்விங்களா.. கம்மின்ஸ்க்கு கைஃப் கேள்வி

0
3528
Kaif

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் தனது நான்காவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி இன்று விளையாடியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.

இதற்கு முன் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி, ஹை ஸ்கோரிங் சாதனை போட்டியாக அமைந்தது. எனவே இன்றும் இப்படியான ஆடுகளமே இருக்கும் என்று நினைத்த வேளையில், கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு கொடுக்கப்பட்டது போல மெதுவான ஆடுகளம் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இதை பயன்படுத்தி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக சரியான லைன் லென்த்தில் மெதுவாக வீசி, சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கான வேகத்தை கொடுக்காமல், அந்த அணியின் ரன் வேகத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று மொயின் அலி இருக்கும் பொழுது முன்கூட்டியே ஆடுகளம் எதுவாக இருக்கிறது என்று ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சை எதிர்கொண்டு ரவீந்திர ஜடேஜா விளையாட, பந்து நேராக புவனேஸ்வர் குமார் கைக்கே சென்றது. அப்பொழுது கிரீசை விட்டு ரன் எடுக்க ரவீந்திர ஜடேஜா வெளிய வந்த பொழுது, புவனேஸ்வர் குமார் ஸ்டெம்பை நோக்கி பந்தை அடித்தார். ஆனால் ஜடேஜா தான் இருந்த இடத்தில் இருந்து குறுக்கே ஓடி, பந்தை உடம்பில் தடுத்து விட்டார்.

ரன் அவுட்டுக்கு பந்தை ஸ்டெம்ப் நோக்கி எறியும் பொழுது, பேட்ஸ்மேன்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அதே பக்கத்தில் நகர வேண்டும். குறுக்கே சென்றால் அவுட் கொடுக்கப்படும். இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் ஹென்றி கிளாசன் அப்பீல் செய்ய, மூன்றாவது நடுவரிடம் தீர்ப்புக்காக சென்றார்கள். இந்த நேரத்தில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தலையிட்டு, அப்பீலை வாபஸ் வாங்கினார். இது அந்த நேரத்தில் மைதானத்தில் பெரிய பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க பவுலிங் பண்ணப்பவே பிளான் பண்ணிட்டோம்.. இவங்க மூணு பேருக்கும் பெரிய நன்றி சொல்லிக்கிறேன் – அபிஷேக் ஷர்மா பேட்டி

இந்த நிகழ்ச்சி குறித்து ட்விட் செய்துள்ள முகமது கைஃப் கூறும் பொழுது “ஜடேஜாவுக்கு எதிராக ரன் அவுட் அப்பீலை திரும்பப்பெற்ற கம்மின்ஸ்க்கு இரண்டு கேள்விகளை முன் வைக்கிறேன். ரன் எடுக்கப் போராடும் ஜடேஜாவை தொடர்ந்து விளையாட வைக்க, தோனியை பேட்டிங் செய்ய வரவிடாமல் தடுக்கும் தந்திரமா இது? அடுத்து டி20 உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு இதை கம்மின்ஸ் செய்வாரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.