இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்திற்கான அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்பொழுது பயிற்சியை மீண்டும் மெதுவாக துவங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்திய அணியின் தன் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பாத வீரர்கள் பற்றி பேசியிருக்கிறார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காயத்துடன் விளையாடியதால் டி20 உலக கோப்பை தொடரை முகமது ஷமி தவறவிட்டார். இதனால் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகிக்கும் அரிய வாய்ப்பையும் தவறவிட்டார்.
இந்திய கிரிக்கெட்டில் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் யார்? ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் தன்னிடம் கோபமாக பேசியதை எப்படி எடுத்துக் கொண்டார்? என்று பல விஷயங்களை மனம் திறந்து முகமது ஷமி இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியின் பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
பொதுவாக முகமது ஷமி பந்தின் தையலை பயன்படுத்தி பந்து வீசுகின்ற காரணத்தினால், பந்து ஆடுகளத்தில் மோதியதும் எப்படி செல்கிறது என்றும், எந்த வேகத்தில் வருகிறது என்றும் கணிப்பது மிக கடினமாக இருக்கும். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் முகமது ஷமி பந்துவீச்சை விளையாடுவது கடினமாக இருக்கும்.
இந்த நிலையில் இந்திய அணியின் வலைப்பயிற்சியில் தன்னை சந்திக்க விரும்பாத இந்திய வீரர் பற்றியும், தன்னை எதிர்கொண்டு விளையாட மிகவும் ஆர்வம் காட்டும் வீரர் பற்றியும் முகமது சாமி வெளிப்படையாகக் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : சாம்சனுக்காக கம்பீரை விமர்சனம் செய்யாதிங்க.. செலக்சன் சிக்கல் ஏற்பட காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்
இதுகுறித்து முகமது ஷமி கூறும் பொழுது ” ரோகித் சர்மா எப்பொழுதும் வலைப்பயிற்சியில் என் பந்துவீச்சை சந்தித்து விளையாட முடியாது என்று மறுத்து விடுவார். அதே சமயத்தில் விராட் கோலி என் பந்துவீச்சில் விளையாட விரும்புவார். எங்கள் இருவருக்குமே அது சவால் ஆனதாக இருக்கும். மேலும் எங்கள் இருவருக்குமே அது சிறந்த பயிற்சியாகவும் அமையும். உதாரணமாக சில்லி பாயிண்ட் மற்றும் ஸ்லீப்பில் தலா இரண்டு பீல்டர்களை வைத்து ரன் அடிக்கும்படி விராட் கோலிக்கு நான் சவால் விடுவேன். அவரும் அதை ஏற்று விளையாடுவார். இது எங்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






