சாம்சனுக்காக கம்பீரை விமர்சனம் செய்யாதிங்க.. செலக்சன் சிக்கல் ஏற்பட காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

0
107

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சதம் அடித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சஞ்சு சாம்சனின் பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

இதுகுறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா “இங்கு பிரச்சனை என்னவென்றால் கடந்த இரண்டு உலகக் கோப்பைகளுக்கு இடைவெளியில் முன்னணி வீரர்கள் இந்திய அணியில் அடிக்கடி விளையாடாமல் போவதை பார்க்கலாம்.

இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. அவர்கள் நன்றாக விளையாடினால் மீண்டும் அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் மூத்த வீரர்கள் அணிக்குள் வந்தவுடன் அவர்களுக்கான வாய்ப்பு அதற்குப் பின்னர் கிடைக்காமல் போய்விடுகிறது.

- Advertisement -

ஆனால் இது சரியா? என்பதை பார்க்க வேண்டும். புதிய பயிற்சியாளர்,புதிய கேப்டன், புதிய செலக்சன் கமிட்டி என மாற்றங்கள் நிகழும் போது அவர்களுக்கும் வீரர்களுக்கும் இடையேயான பாலம் சரியாக அமைவதில்லை. நடுவில் இடைவெளியும் ஏற்படுகிறது.

சஞ்சு சாம்சன் விஷயத்திலும் அந்த இடைவெளி தான் தற்போது உள்ளது. சாம்சன் விஷயத்தில் தெளிவு இல்லை. அவர் கடைசியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய போதும் அவருக்கு தற்போது அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் கம்பீரே நான்கு வருடங்களுக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று ட்விட் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க:பஞ்சாப் பாசத்துல பேசாதிங்க.. ருதுராஜ் பாவம் இல்லையா.. அந்த 3 பேர்தான் முக்கியமா? – ஹர்பஜன் சிங் கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

ஆனால் அதற்குப் பின்னர் சஞ்சு சம்சனும் நிறைய தொடர்களில் விளையாடி தன்னை நிரூபித்திருக்கிறார். இருப்பினும் கம்பீருக்கு தற்போது வேறு கருத்துக்கள் இருக்கலாம். அதனால் அவரை ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

- Advertisement -