“ரொம்ப கஷ்டமா இருக்கு.. தலையில் வைக்கணும்” – கோப்பை மீது கால் வைத்த விவகாரத்தில் முகமது ஷமி வருத்தம்

0
549

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் அஹமதாபாத்தில் நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் சரணடைந்தது.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்கள் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்கள் கே எல் ராகுல் 66 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் டிராவஸ் ஹெட் மிகச் சிறப்பாக விளையாடி 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி ரசிகர்களின் நெஞ்சங்களை இந்த தோல்வி சுக்கு நூறாக உடைத்தது. 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெற்றி பெறும் என நம்பியிருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணியின் ரசிகர்கள் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் அவர்களது மனதை பாதிக்கும் வகையில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றது. கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் வீரர் மார்ஸ் உலக கோப்பையின் மீது கால் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய கண்டனத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. மார்ஸ் ஒரு கையில் மதுவுடன் உலகக் கோப்பையின் மீது கால் வைத்திருப்பது போன்ற அந்த புகைப்படம் இந்திய ரசிகர்களின் மனதை மீண்டும் நோகடித்தது .

இது தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும் இந்த வருட உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” அந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. இந்த கோப்பை காகத்தான் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களது உயிரை கொடுத்து போராடின. இத்தனை மதிப்பு மிக்க உலகக்கோப்பை மீது கால் வைத்திருப்பது ஒரு மோசமான செயல். அதனை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன்”என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் இடம்பெறாதது பற்றி பேசிய அவர்” போட்டிகளில் விளையாட முடியாமல் போனது வருத்தமாக தான் இருந்தது. அதற்கு மனதளவில் தயாராகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். சில நேரங்களில் விளையாடாமல் இருப்பது அழுத்தத்தை கொடுக்கும். எனினும் நமது அணி வீரர்கள் சிறப்பாக செயல்படும்போது அது நமக்கு நம்பிக்கையும் நிம்மதியையும் கொடுக்கும்” எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய முகமது சமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே உலகக்கோப்பையில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் சமீ படைத்திருக்கிறார்.