இது வெட்கக்கேடானது.. கேஎல் ராகுலை இப்படி நடத்தி செங்கோட்டையில் கொடியா ஏத்தினிங்க – முகமது சமி கோபம்

0
500
Shami

ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கும் ஏதாவது ஒரு சர்ச்சையான நிகழ்வு முக்கியத்துவம் பெற்று விடும். இந்த வகையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் வைத்து நடத்திய விதம் தற்பொழுது பெரிய சர்ச்சையாகி வருகிறது. இது குறித்து இந்திய வீரர் முகமது சமி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

நேற்று முன்தினம் ஹைதராபாத் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி படுதோல்வியை சந்தித்தது. லக்னோ அணி நிர்ணயத்த 166 ரன் இலக்கை, ஹைதராபாத் துவக்க ஜோடி ஒன்பது புள்ளி நான்கு ஓவர்களில் எட்டி சாதனை படைத்தது.

- Advertisement -

இந்தப் போட்டிக்குப் பிறகு மைதானத்திற்கு வந்த லக்னோ அணியின் உரிமையாளர் கேப்டன் கேஎல்.ராகுல் இடம் மிகக் கடுமையான முறையில் விவாதித்துக் கொண்டிருந்தார். இது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பப்பட்டது. அவர் பல ஆயிரம் பேர் பார்க்க மைதானத்தில் தங்கள் அணியின் கேப்டனை வைத்து பேசிய விதம் யாருக்கும் சரியானதாக படவில்லை.

இந்த நிகழ்வு நடந்த உடனேயே சமூக வலைதளங்களில் தீப்பற்றிக் கொண்டது போல இது குறித்து மிகப்பெரிய அளவில் விவாதங்கள் கிளம்பின. மேலும் பல வீரர்கள் நிச்சயம் இது ஒரு அறைக்குள் நடந்திருக்க வேண்டியது மைதானத்தில் அல்ல என கருத்துகளை கூறி வந்தார்கள். இந்த நிலையில் முகமது சமி ஒரு படி மேலே சென்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து முகமது சமி கூறும் பொழுது “வீரர்களுக்கென்று மரியாதை உண்டு. அணி உரிமையாளரான உங்களுக்கும் மரியாதை உண்டு. உங்களைப் பார்த்து பலர் கற்றுக் கொள்ள இருக்கிறார்கள். இப்படி ஒரு விஷயம் கேமராவுக்கு முன்னால் நடந்ததை வெட்கப்பட வேண்டியது. இது குறித்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க: விராட் கோலி அதிர்ஷ்டசாலி.. ஆனா அவர் நேற்று செஞ்ச இந்த ஒரு விஷயத்தை கவனிச்சிங்களா? – ஹர்பஜன் சிங் விளக்கம்

நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் இருக்கிறது. நீங்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டல் என வேறு இடங்களில் இதை செய்திருக்கலாம். இதை மைதானத்தில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒன்றை செய்து தான் செங்கோட்டையில் கொடியேற்றியது போல் ஆகிவிடாது” எனக் கடுமையாகக் கூறியிருக்கிறார்.