ஆசியக் கோப்பை தொடருக்கு பும்ரா தேர்வு செய்யப்பட்டதும் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படாததும் குறித்து முகமது கைப் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
நேற்று அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றார்கள். ஆனால் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
யோசித்து வாயை திறக்கவும்
பும்ராவின் பணிச்சுமை குறித்தும், அவர் அனைத்து போட்டிகளில் விளையாடாதது பற்றியும் வெளியில் இருந்து சில விமர்சனங்கள் வந்திருந்தது. தற்போது அவர் ஆசியக் கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கும் பொழுதும் இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதற்கு பதில் அளித்த முகமது கைப் கூறும் பொழுது ” பும்ரா குறித்து பேசும் பொழுது கவனமாக வாயை திறக்க வேண்டும். அவர் இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றதை வைத்து பேசக்கூடாது. மூன்று வடிவங்களிலும் அவர் விளையாடிய எத்தனை போட்டிகளில் இந்திய அணி வென்று இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அவர் இந்தியாவின் நம்பிக்கைகுரிய வைரம். யாரும் அவர் பற்றி புகார் அளிக்க வேண்டாம். அவர் மீது எந்த கறைகளும் கிடையாது”
28 ஓவர்கள் போதும்
“ஆசியக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் பொழுது 7 போட்டிகளில் விளையாடும். ஏழு போட்டிகளிலும் பும்ரா மொத்தமாக 28 ஓவர்கள் பந்து வீசினால் போதும். மேலும் ஓமன் போன்ற பலவீனமான நாட்டுக்கு எதிராக அவரை விளையாட வைக்காமலும் இருக்கலாம். எனவே அவரால் சுலபமாக விளையாடி விட முடியும்”
இதையும் படிங்க : ODI ஐசிசி ரேங்க் பட்டியல்.. திடீரென தூக்கப்பட்ட விராட் ரோகித்.. ஓய்வு பெறுகிறார்களா? – என்ன நடக்கிறது?
“இங்கிலாந்தில் முகமது சிராஜ் செயல் பட்ட விதத்தில் அவர் தற்போது இடம்பெறாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரும் இந்த அணியில் இடம் பெற்று இருக்க மிகவும் தகுதியானவராக இருக்கிறார். தொடரை இரண்டுக்கு இரண்டு என மாற்றி தந்தவர் தற்பொழுது இல்லை” என்று கூறியிருக்கிறார்.






