ODI ஐசிசி ரேங்க் பட்டியல்.. திடீரென தூக்கப்பட்ட விராட் ரோகித்.. ஓய்வு பெறுகிறார்களா? – என்ன நடக்கிறது?

0
172
Rohit

ஐசிசி ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதற்கான காரணம் புரியாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தடுமாறி வருகிறார்கள்.

ஐசிசி ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் அனைத்து பிரிவிலும் தரவரிசை பட்டியலை புதுப்பித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இன்றைய பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது.

- Advertisement -

பழைய பட்டியல்

ஐசிசி முன்பு வெளியிட்டிருந்த ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும் இடம் பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் திடீரென புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது சுப்மன் கில் முதல் இடத்திலும், பாபர் அசாம் இரண்டாவது இடத்திலும், டேரில் மிட்சல் மூன்றாவது இடத்திலும், சரித் அசலங்கா நான்காவது இடத்திலும் இடம் பெற்று இருக்கிறார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முதல் நான்கு இடங்களில் மட்டும் இல்லாமல் முதல் 100 இடங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் தவறு நடந்திருப்பதாக ஐசிசி தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த வாரம் புதுப்பிக்கப்படும் பொழுது சரி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பழைய மற்றும் புதிய பட்டியல்

பழைய பட்டியல்:
சுப்மன் கில் – 784
ரோஹித் சர்மா – 756
பாபர் அசாம் – 751
விராட் கோஹ்லி – 736
டேரில் மிட்செல் – 720
சரித் அசலங்க – 719
ஹாரி டெக்டர் – 708
ஷ்ரேயாஸ் ஐயர் – 704
இப்ராஹிம் ஜட்ரன் – 676
குசல் மெண்டிஸ் – 669

இதையும் படிங்க: ரிசர்வ் அணியில் கூட இடமில்லையா? இன்னும் அந்த மனுசன் என்ன செய்யனும்? ஆகாஷ் சோப்ரா கருத்து

புதிய பட்டியல்:
சுப்மன் கில் – 784
பாபர் அசாம் – 739
டேரில் மிட்செல் – 720
சரித் அசலங்க – 719
ஹாரி டெக்டர் – 708
ஷ்ரேயாஸ் ஐயர் – 704
ஷாய் ஹோப் – 699
இப்ராஹிம் ஜட்ரன் – 676
குசல் மெண்டிஸ் – 669
டிராவிஸ் ஹெட் – 648

- Advertisement -