தல தோனிக்கு செம பிளேயர் ஏலத்துல கிடைக்கப் போறார்.. சிஎஸ்கே அவரை விட்டுராதீங்க – அஸ்வின் அறிவுரை

0
0

​வரும் ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் இடதுகை ஃபாஸ்ட் பௌலர் நடராஜனை சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் ஏலத்தில் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.

​டெல்லி கேப்பிட்டல்ஸ் டீம் அவரை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து, அவர் சிஎஸ்கே டீமிற்கு சிறந்த தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

​காயங்கள் காரணமாக இந்திய அணியில் இடம் இழந்துள்ள நடராஜன், சிஎஸ்கே டீமின் டெத் ஓவர் பௌலிங் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருப்பார் என கருதப்படுகிறது.

​இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “நடராஜன் ஏலத்திற்கு வர வாய்ப்பிருப்பதாக கேள்விப்பட்டேன், சிஎஸ்கே டீமிற்கு டெத் ஓவர் பௌலிங் தேவைப்படுகிறது, அதனால் நடராஜன் ஏலத்திற்கு வந்தால் அவர் சிஎஸ்கே டீமிற்கு ஒரு கிரேட் ஆப்ஷனாக இருப்பார், ஆனால் எஸ்ஆர்எச் டீமும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் இதுகுறித்து விஜய் சங்கர் பேசும்போது “ஒரு தமிழ்நாடு பாய் சிஎஸ்கே டீமிற்கு விளையாடுவது மிகவும் கிரேட் விஷயமாக இருக்கும், இந்திய அளவில் சிறந்த டெத் ஓவர் பௌலர்கள் அதிகம் இல்லை, ஒவ்வொரு தமிழ்நாடு பிளேயரின் டிரீமும் சிஎஸ்கே டீமிற்கு விளையாடுவதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -