19 வருஷத்துக்கு முன்ன தோனி ஒரு சம்பவம் பண்ணார்.. நான் அப்ப அங்கதான் இருந்தேன் – முகமது கைஃப் சுவாரசிய பேச்சு

0
32
Kaif

ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த லைம் லைட்டும் மகேந்திர சிங் தோனியின் மேல் விழுந்திருக்கிறது. நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 16 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் தோனி 37 ரன்கள் எடுக்க, ஐபிஎல் தொடரின் மையமாக அவர் மாறிப் போனார்.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்திருந்த போதும், மகேந்திர சிங் தோனியின் அபாரமான பேட்டிங் செயல் திறன், அந்தத் தோல்வியை முற்றிலுமாக மறக்கடித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது. தற்பொழுது வரை சமூக வலைதளங்களை தோனியும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

தோனியை பொருத்தவரை எடுத்துக் கொண்டால் அவர் ஐபிஎல் தொடருக்கு தயாராக மற்ற முன்னாள் வீரர்கள் போல உள்நாட்டில் எந்த கிளப் கிரிக்கெட்டும் விளையாடுவது கிடையாது. பயிற்சிக்கு சற்று முன்னதாக சென்னை வருகிறார். அங்கிருந்து அவரது சராசரியான பயிற்சி மட்டுமே நடக்கிறது.

ஆனால் அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்து களத்தில் வந்து விளையாடும் பொழுது, அவர் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுபவர் போல இருக்கிறார். அவர் பந்தை கணித்து கனெக்ட் செய்யும் விதமும், பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் அனுப்பும் விதமும், அவர் ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கு மட்டுமே வந்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக காட்டவில்லை.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறும் பொழுது “தோனி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடாத வீரர் போலவே தெரியவில்லை. அவர் ரஞ்சி கிரிக்கெட்டோ அல்லது கிளப் கிரிக்கெட்டோ விளையாடுவது இல்லை.மேலும் அவர் இந்திய அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் மீண்டும் ஐபிஎல் தொடரில் வந்தே விளையாடுகிறார். இப்படி இருந்தும் அவர் அபாரமாக பேட்டிங் செய்கிறார்.

இதையும் படிங்க : 455 ரன்.. ஒரே நாளில் 15 விக்கெட்.. பங்களாதேஷ் அணியை கதறவிடும் இலங்கை.. ரசிகர்கள் கோபம்

இன்று அவர் பேட்டிங் செய்த விதத்திற்கு எட்டாவது இடத்தில் வரக்கூடியவர் கிடையாது. அவர் நான்காவது இல்லை ஐந்தாவது இடத்தில் வரவேண்டும். அவர் சீக்கிரமாக பேட்டிங் வந்து கொஞ்சம் பந்துகளை சேர்த்து விளையாட வேண்டும். எட்டாம் இடம் என்பது அவருக்கு மிகவும் குறைச்சலான ஒன்று. 19 வருடத்திற்கு முன்பு 25ஆம் ஆண்டு இதே விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய பொழுது நான் கூட இருந்தேன். பாகிஸ்தானுக்கு எதிராக அந்தப் போட்டியில் பெரிய சிக்ஸர்கள் அடித்த நீண்ட தலை முடி கொண்ட தோனி இன்று மீண்டும் திரும்பி இருக்கிறார். இது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கான எச்சரிக்கை ஒலி. ஐபிஎல் தொடரில் தோனியின் பார்ம் தொடரும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -