455 ரன்.. ஒரே நாளில் 15 விக்கெட்.. பங்களாதேஷ் அணியை கதறவிடும் இலங்கை.. ரசிகர்கள் கோபம்

0
163
Srilanka

பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை அதன் சொந்த மண்ணில் மிகச் சிறப்பான முறையில் விளையாடி சோதித்துக் கொண்டிருக்கிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, இரண்டாவது நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது.

இதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை அபாரமான ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இலங்கை அணிக்கு முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் ஆறு பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடித்தார்கள். குசால் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92* ரன்கள் என அதிகபட்சம் எடுத்தார்கள். பங்களாதேஷ் அணியின் தரப்பில் முன்னாள் கேப்டன் சாகிப் அல்ஹசன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி நேற்று ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணியின் அபார வேகப்பந்துவீச்சு முன்னால் சுருண்டது. பங்களாதேஷ் அணியின் தரப்பில் ஜாகிர் ஹசன் மற்றும் தாக்குப்பிடித்து 54 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் தரப்பில் பந்துவீச்சில் அசிதா பெர்னாடோ 4, விஷ்வா பெர்னாடோ, லகிரு குமாரா மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதற்கடுத்து இலங்கை அணி 353 ரன்கள் முதல் இன்னிங்ஸில் மாபெரும் முன்னிலையை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இன்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் ஒட்டுமொத்தமாக 45 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் மட்டும் மொத்தம் 15 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸி அணியை இந்த இந்திய பையன் சோதிக்கப் போறான்.. ஸ்மித் எச்சரிக்கையா இருங்க – ஸ்டூவர்ட் பிராட் பேச்சு

பங்களாதேஷ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் ஹசன் மக்மூத் 4, காலேத் அஹமத் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இலங்கை அணி ஏறக்குறைய இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறது. பங்களாதேஷ் அணியின் கள நடவடிக்கைகளுக்கு, அவர்களது சொந்த நாட்டிற்கு சென்று இலங்கை அணி சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.