இந்திய கிரிக்கெட்

டிராவிட் ஐபிஎல் கோப்பையை வெல்லலை.. ஆனா இதை கம்பீர் அவர் கிட்ட கத்துக்கணும் – முகமது கைஃப் அறிவுரை

ஐபிஎல் கோப்பையை வெல்லாத பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இடம் இருந்து இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கம்பீர் கற்றுக்கொள்ள வேண்டும் என முகமது கைஃப் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கவுதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி பல்வேறு வரலாற்று தோல்விகளை சந்தித்து வருவது பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக ஆறே மாதத்தில் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து வெளியில் பேசப்படுகிறது.

கம்பீர் பயிற்சியில் வரலாற்று தோல்விகள்

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி தொடரை இழந்தது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் வெறும் 46 ரன்னுக்கு ஆட்டம் இழந்து, ஆசிய அணி ஒன்று சொந்த நாட்டில் குறைந்த ரன்னுக்கு ஆட்டம் இழந்த மோசமான சாதனையை படைத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகியது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 10 வருடங்களுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை மூன்றுக்கு ஒன்று என இழந்தது. இந்த ஆறு மாத காலத்திற்குள் இத்தனை வரலாற்று தோல்விகளை இந்திய அணி அவரது பயிற்சியின் கீழ் சந்தித்திருப்பது பெரிய விமர்சனங்களை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

அவரிடம் கற்றுக் கொள்ளுங்கள்

இதற்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஆரம்ப காலத்தில் தோல்விகளை சந்தித்தார். ஆனால் அங்கிருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து இறுதியாக டி20 உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த நிலையில் அவரிடம் இருந்து கம்பீர் கற்றுக் கொள்ள வேண்டும் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு அடிக்க இருக்கும் அதிர்ஷ்டம்.. அகர்கர் கொண்டுவரும் மாஸ்டர் பிளான் – வெளியான புதிய தகவல்கள்

இதுகுறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “கம்பீர் தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். ஐபிஎல் கோப்பையை வெல்லாத ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக வந்து தான் செய்த தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு, இறுதியாக டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். டிராவிட் போலவே கம்பீரும் தன்னுடைய தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு முன்னேறி வரவேண்டும்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by