ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு இந்தியத் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் அடுத்தடுத்து முக்கியமான சில வாய்ப்புகளை தர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் விராட் கோலிக்கு பிறகு இந்திய பேட்டிங் யூனிட்டை தலைமை தாங்க கூடியவராக தெரிகிறார். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் ஜெய்ஸ்வால்தான் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் அவருக்கு புதிதாக இன்னொரு வாய்ப்பு தேடி வர இருப்பதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவால் தாமதமான வாய்ப்பு
பாகிஸ்தான் அணியின் இளம் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் வேகமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது மூன்று ஒருநாள் கிரிக்கெட் சதங்களை அடித்தும் இருக்கிறார். இந்த வரிசையில் இடம் பெறவேண்டிய ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஒருநாள் அணியில் தொடக்க இடத்தில் இருப்பதால் வாய்ப்பு பெற முடியாமல் இருந்தார்.
இந்த நிலையில் வருகின்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க அகர்கர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதன்மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக அறிமுகம் ஆவார். இதனோடு மேலும் சில அதிரடி வியூகத்தையும் அகர்கர் வகுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அகர்கர் வகுத்துள்ள வியூகம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்க உள்ள சாம்பியன்ஸ்ஸ் டிராபி தொடருக்கும் ஜெய்ஸ்வாலை கொண்டுவர அகர்கர் நினைக்கிறார். இதனால் துவக்க இடத்தில் இடது-வலதுகை காம்பினேஷன் கிடைக்கும். மேலும் மிடில் வரிசையில் சில முக்கிய மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும். அதாவது ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய இடத்திற்கு விராட் கோலியை நகர்த்த முடியும்.
இதையும் படிங்க : ஆஸியை எப்படி ஜெயிக்கிறதுனு எங்களுக்கு தெரியும்.. WTC பைனல்ல இதை செய்வோம் – ரபாடா சவால்
இதன் மூலம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துவக்க இடத்தை வலிமையாக்குவதோடு, விராட் கோலி போன்ற ஒரு வீரர் நான்காவது வீரராக வந்தால், இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரும் மிகவும் வலிமையானதாக மாறும். எனவே அகர்கர் இதையெல்லாம் மனதில் வைத்து திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.






