சூரியகுமார் கில் கிடையாது.. அவர் விராட் கோலி மாதிரி.. எனவே இந்த 3 விஷயத்தை பத்தி மட்டுமே பாக்கணும் – முகமது கைஃப் பேச்சு

0
49
Surya

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் துணை கேப்டனாக இருந்த கில் மற்றும் கேப்டனாக இருந்து வரும் சூரியகுமார் இருவரையும் ஒரே போல பார்க்க முடியாது என முகமது கைப் தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய டி20 அணியில் இருந்து சரியாக விளையாடாத கில் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரைப் போலவே தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் சூரியகுமார் யாதவையும் நீக்க வேண்டும் என சில குரல்கள் வெளியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உதாரணமாக விராட் கோலி

இதுகுறித்து முகமது கைப் பேசும் பொழுது “கில் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் இடையே டி20 கிரிக்கெட்டில் வித்தியாசம் இருக்கிறது. சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் தன்னை நிரூபித்தவராக இருக்கிறார். அவர் தனியாக போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். இந்த வடிவத்தில் பேட்ஸ்மேனாக முதல் இடத்தில் இருந்திருக்கிறார். ஆனால் கில் இந்த வடிவத்தில் நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. எனவே இருவரையும் ஒப்பிட முடியாது”

” நீங்கள் இந்த விஷயத்தில் விராட் கோலியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கோவிட் காலத்தில் அவர் இரண்டு வருடங்களாக தடுமாறி வந்தார். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. காரணம் அவர் பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய கிரிக்கெட்டுக்கு பல வெற்றிகளை கொடுத்திருக்கிறார். எனவேதான் சூரியகுமாரையும் இதே வகையில் பார்க்க வேண்டும்”

- Advertisement -

சூரியகுமாருக்கு என்ன பிரச்சனை?

“சூரியகுமாரை அணியிலிருந்து நீக்க முடியாது அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அவர் எங்கே தவறு செய்கிறார்? அவரால் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை? என்பதில் கவனம் செலுத்த வேண்டும். கேப்டன்சி காரணமாக அவருக்கு அழுத்தம் வருகிறதா? என்று பார்க்க வேண்டும் அதுதான் முக்கியம்”

இதையும் படிங்க : ரிஷப் பண்டையும் தூக்க போறாங்க.. அவர் 2018ல் ஆரம்பித்தத மறக்கக்கூடாது – அமித் மிஸ்ரா எச்சரிக்கை

“டி20 வடிவத்தில் சூரியகுமார் யாதவ் நல்ல திடமான வீரர். அவர் எப்படி இந்த கட்டத்தில் இருந்து வெளி வருகிறார்? என்று தான் பார்க்க வேண்டும். அவர் தனது ஆற்றலை வேறு எங்காவது செலவு செய்கிறாரா? அவரது டெக்னிக் எதிரணிகளுக்கு தெரிந்து விட்டதா? இதற்கான பதில்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -