விராட் கோலியின் அந்த சாதனையை உடைக்க நினைச்சு.. நான்தான் உடைஞ்சேன்.. அவர்தான் சிறந்தவர் – ஜோஸ் பட்லர் பாராட்டு

0
0

​ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் விராட் கோலி அடித்த 973 ரன்கள் சாதனையை முறியடிக்க முயற்சித்த போது தான் சந்தித்த சவால்கள் குறித்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மனம் திறந்து பேசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 2022 சீசனின் முதல் பாதியில் தொடர்ந்து செஞ்சரி மற்றும் ஹாஃப் செஞ்சரிகள் விளாசி அசாத்தியமான ஃபார்மில் இருந்தார்.

​அச்சமயத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஆயிரம் ரன்கள் வரை அடிப்பார் என்று அனைவரும் பேசத் தொடங்கினர். ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் எதிர்பாராதவிதமாக சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட்டாகி ஃபார்ம் இழந்து தவித்தார். எனினும் பின்னர் மீண்டு வந்த ஜோஸ் பட்லர் பிளே ஆஃப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அந்த சீசனில் மொத்தம் நான்கு செஞ்சரிகளுடன் 863 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

​இது குறித்து ஜோஸ் பட்லர் பேசும்போது “நான் தொடரின் பாதியில் 450 முதல் 500 ரன்கள் எடுத்திருந்தபோது தான் கடினமான சூழல் வந்தது, கோலியின் சாதனையை எட்ட முடியுமா என்ற பேச்சு எழுந்தது. அதை நான் சரியாக கையாளவில்லை, யாரிடமும் சொல்லவும் இல்லை. இதனால் சில குறைந்த ரன்களில் அவுட்டானேன். தொடருக்கு முன் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த நான், கோலியின் சாதனையை முறித்து 1000 ரன்கள் அடிப்பேனா என்று ஆட்கள் கேட்கும் அளவுக்கு மாறினேன். அது சில போட்டிகளில் எனது ஆட்டத்தை பாதித்தது”

“பின்னர் ட்ரெவர் பென்னியிடம் இதுவும் ஆரஞ்சு கேப் எண்ணமும் என் மனதில் ஓடுவதாகக் கூறினேன். அதன் பிறகு பிளே ஆஃப் போட்டிகளில் மீண்டும் எனது இயல்பான ஆட்டத்தை மீட்டெடுத்தேன். கோலியை விட குறைவாக எடுத்திருந்தாலும் இது என் கரியரில் ஒரு மிகப்பெரிய சீசன். கோலி தான் சிறந்தவர், அவருக்கு அருகில் வருவது எனக்கு பெரிய கான்ஃபிடன்ஸ் பூஸ்டராக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசும்போது “ஜனவரியில் விரலில் ஃபிராக்சர் ஏற்பட்டதால் இந்த தொடருக்கு எந்த தயார்நிலையும் இன்றி வந்தேன். அதுவே எதிர்பார்ப்பு இல்லாமல் ஆட ஒரு பிளஸ் ஆக அமைந்தது. தொடரை நன்றாகத் தொடங்கி இறுதியில் கொஞ்சம் தடுமாறினேன். கங்கக்காரா ஒரு சிறந்த கோச், ஆரம்பத்திலேயே ரன்களை ஃபோர்ஸ் செய்ய வேண்டாம் என்றும் 30 பாலில் 30 ரன்கள் எடுத்திருந்தாலும் நேரம் வரும் வரை காத்திருக்குமாறும் கூறினார். மேலும் மும்பை பிட்ச்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -