இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா எச்சரிக்கை செய்திருக்கிறார்.
தற்போது ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே உறுதியான வீரராக இருக்கிறார். வெள்ளைப்பந்து வடிவங்களில் அவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்வுக்குழு விரும்புவதில்லை. அவரிடம் நிலைத்தன்மை இல்லாததால், விக்கெட்டை எந்த நேரத்திலும் இழக்க கூடியவராக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
2018 முதல் இருக்கிறார்
இந்த நிலையில் அவர் தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் எனவும், இனிமேலும் தன்னை இளம் வீரர் என சொல்லிக் கொள்ள முடியாது எனவும், இல்லையென்றால் அவரை அணியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்றும் அமித் மிஸ்ரா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “ரிஷப் பண்ட் மீது எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு அவர் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். இனிமேல் அவர் தன்னை இளைஞர் என சொல்லிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு விளையாட ஆரம்பித்துவிட்டார். எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்கள் ஆட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்”
எதிரணிகள் கண்டுபிடிப்பார்கள்
“நீங்கள் தற்போது நீண்ட காலமாக விளையாடிக் கொண்டு வருவதால் எதிரணிகள் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள்? எந்தப் பந்தில் தடுமாறுகிறீர்கள் என்று எல்லாவற்றையும் கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். எனவே நீங்கள் உங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் ஒரே முறையில் பௌண்டரி சிக்ஸர் என மட்டுமே அடித்து விளையாட முடியாது”
இதையும் படிங்க டி20க்கு கில்லை எடுப்பது.. ஸ்ரீகாந்தை விட்டு கவாஸ்கரை எடுப்பது மாதிரி.. பெரிய சந்தேகமே வந்துச்சு – டபுள்யுவி ராமன் கருத்து
“நீங்கள் பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாட வேண்டியதாக இருக்கும். அதற்கேற்ற படி உங்களது ஆட்டத்தை நீங்கள் மாற்ற வேண்டும். நீங்கள் தடுமாறக்கூடிய பந்துகளிலும் சிறப்பாக விளையாடும் படி மாற வேண்டும். நீங்கள் பிடிவாதமாக ஒரே முறையில் தான் விளையாடுவேன் என்று நிற்க முடியாது. அப்படி நீங்கள் விளையாடி தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்றால் நீங்கள் அணியை விட்டு நீக்கப்பட்டு விடுவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.






