ரோகித்துக்கு அகர்கர் விரித்த வலை.. ப்ளீஸ் இந்த ரூட்ல முடிவு கட்டாதீங்க – முகமது கைஃப் வேண்டுகோள்

0
60
Rohit

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை வைத்து ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவு செய்யக்கூடாது என முகமது கைஃப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணி தற்போது உள்நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அடுத்து ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு பின்னடைவு

தற்போது ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு புதிய கேப்டனாக கில் கொண்டுவரப்பட்டு ரோஹித் சர்மா நீக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் நீக்குவதற்காகவே இப்படி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல புள்ளி விவரங்கள் கிடையாது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான முறையில் விளையாடக்கூடிய திறமை இருப்பதால் விராட் கோலி தப்பித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆஸ்திரேலியா தொடர் ரோஹித் சர்மாவுக்கு விரிக்கப்பட்ட வலையாகவே கருதப்படுகிறது.

- Advertisement -

இப்படி செய்ய வேண்டாம்

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” ரோஹித் சர்மாவை பொறுத்த வரையில் அவர் நிலைத்தன்மை கொண்டவராக இருந்தது கிடையாது. அவர் விராட் கோலி போல் சீரான ரன்கள் எடுத்தது இல்லை. ஆனால் அவர் திடீரென பெரிய போட்டிகளில் பெரிய ரன்கள் எடுத்து தொடரை வென்று கொடுத்து விடுவார். அவருடைய வரலாறு இப்படித்தான் இருக்கிறது”

இதையும் படிங்க : வெஇ 2வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. சாய் சுதர்சன் நீக்கமா?.. முக்கிய 2 மாற்றங்கள்

“நடந்து முடிந்த சாம்பியன் டிராபி தொடரில் அவருக்கு லீக் போட்டிகள் சரியாக அமையவில்லை. அதே சமயத்தில் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன் குவித்து அவர் ஆட்டநாயகன் விருதையும், கோப்பையையும் வென்று கொடுத்தார். எனவே ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பாக இல்லை என்றாலும் கூட அவரை அணியை விட்டு நீக்க கூடாது. அவர் பெரிய வீரர் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -